இலங்கையில் 'ரோச கெக்குளு' எனும் சிவப்பரிசி அறிமுகம்
(tn) இரசாயன கலப்பட மல்லாத புதிய வகையான ‘ரோச கெக்குளு’ எனும் சிவப்பரிசி தற்போது அறிமுகமாகியுள்ளது. நாட்டு மக்களின் தேக நலனில் அதிக அக்கறை கொண்ட கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் முயற்சியின் பயனாக இந்த புதிய வகை அரிசியினை தற்போது சத்தொச மற்றும் லங்கா சத்தொச வலையமைப்புக்கூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
நீரிழிவு நோயாளர்கள் மற்றும் சுகயீனமுற்ற பலருக்கு சிவப்பு அரிசியையே உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் சிபாரிசு செய்கின்றனர். சந்தையில் சிவப்பு அரிசிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதற்கு சமனாக இரசாயன கலப்படமற்ற தேகத்திற்கு சிறந்த ஆரோக்கியம் தரவல்ல புது வகையான சிவப்பரிசியை ‘ரோச கெக்குளு’ என்னும் பெயரில் கூட்டுறவு அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
இந்த அரிசியினை கிலோ ஒன்று 48 ரூபா வீதம் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிவப்பு அரிசிக்கு அதிக கிராக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment