அமைச்சர் அதாவுல்லா மக்களை கைவிடமாட்டார் - உதுமாலெப்பை
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் ஊடாக பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சமூகமயப்படுத்த முடியும், இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை குறிப்பிட்டார்
தேசிய சுதந்திர ஊடகவியலாளர் கலாசார அமைப்பு அமைப்பு (நிம்கோ) ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு பொத்துவில் அறும்பை 'ஹங்குலூஸ்' உல்லாச விடுதியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்றது. இறுதி நாள் செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொணடு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒரு நாட்டை இயக்குகின்ற நான்கு துறைகளில் நான்காவது இடத்தை வகிப்பது ஊடகத்துறையாகும். அந்தளவு சக்திமிக்க ஊடகத்துறையில் ஊடகவிலளர்கள் பணியாற்றுவது என்பது இறைவன்கொடுத்த வரமென்றே சொல்ல வேண்டும். இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிப்பதில்லை. இறைவன் வழங்கியுள்ள கொடையக் கருதும் இந்த ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் நீதி நியாயத்துடன் ஊடகத் தர்மத்தைப் பேணிப் பணியாற்ற முன்வர வேண்டுமென்றார்.
ஊடகவியலாளர்கள் நீதி நியாத்துக்குக் கட்டுப்பட்டு ஊடகப்பணியை மேற்கொள்ளும்போதுதான் சிறந்த, நடுநிலைமை வகிக்கக் கூடிய ஊடகவிலாளர்கள் என்ற சமூக அந்தந்தைப் பெற முடியும். அத்துடன் ஊடகத்துதுறையில் பணியாற்றுபவர்களுக்கிடையே புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் ஒற்றுமையும் காணப்படுவது இன்றியமையாதது. ஒன்றுமையுடன் செயற்படுவதன் மூலமே உங்களது பேனை முனையின் வலிமையை ஏனையவர்களுக்குப் புரியச் செய்ய கூடியதாவிருக்குமென்றார்.
மூவின மக்கள் வாழும் இந்த அம்பாறை மாவட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்குமே ஒரு முன்னோடி மாவட்டமாக அதாவது மூவின மக்களும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைப்பட்டு வாழும் மக்களைக் கொண்ட மாவட்டமாக மாற்ற வேண்டிய பொறும்பும் இந்த மாவட்ட ஊடகவிலாளர்களின் பேனை முனையில் தங்கியுள்ளது.
அந்தப் பணியைச் செய்வதன் ஊடாக எதிர் காலத்தில் இச்சமூகத்தின் மத்தியில் தாக்கம் செலுத்தும் நற்பணியைச் செய்தவர்களாக இம்மாவட்ட ஊடகவிலாளர்கள் கருதப்படுவார்கள் என்று நான் நம்புகின்றேன் எனக் கூறினார்.
அது தவிர, பொத்துவில் பிரதேசத்தில் இந்த ஊடகவிலாளர்களின் செயலமர்வு நடைபெறுவது முக்கிய நிகழ்வாகவே நான் கருதுகிறேன். யுத்தம் மற்றும் சுனாமி அனர்தத்தின் பின்னர். பொத்துவில் பிரதேசம் பல பிரச்சினைகளை எpர்நோக்கியது. இப்பிரதேசம் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வை காண முடிந்துள்ள போதிலும் இன்னும் நிறையவே பிரச்சினைகளுக்கு பொத்துவில் பிரதேசம் முகம்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகளினால் பொதுத்துவில் பிரதேசத்துக்கான பாராளுமன்ற மற்றும் மாகாண சபைக்கான அரசியல் அதிகாரங்கள் பறிபோகி, அரசியல் அதிகாரமற்ற மக்களாக பொத்துவில் பிரதேச மக்கள் உள்ளபோதிலும், தேசிய காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் பொத்துவில் மக்களைக் கைவிடவில்லை. கைவிடப்போவதுமில்லை. எங்களுக்குள்ள அமைச்சுப் பதவிகளினூடாக இந்த பிரதேச மக்களின் தேவைகளை முடிந்தளவு நிறைவேண்டி வருகின்றோம் அதை இந்தப் பிரதேச மக்கள் அறிவார்கள்.
இன்று பொத்துவில் பிரதேச மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் யார் எங்களை ஏமாற்றினார்கள் யார் எங்கள் துயரங்களில் பங்குகொள்கிறார்கள். எமது தேசியத் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவினாலும் என்னாலும் பல அபிவிருத்திப் பணிகள் இந்தப் பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.; ஒரு சில பிரச்சினைகளை எங்களால் தீhத்து வைக்க முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் உரியவர்களுடன் கலந்தரையாடி அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment