டெங்கு நுளம்புகளை விரட்டியடிக்க களத்தில் குதித்த இளைஞர்கள்
(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் 51 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாகவும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.
வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, செம்மண்னோடை, மாவடிச்சேனை போன்ற பகுதிகளில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப் பகுதியில் இந் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ், வாழைச்சேனை பிரதேச சபை, கல்குடா அல் கிம்மா சமுக சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சிரமதான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதுடன் வீடு வீடாகச் செல்லும் அதிகாரிகள் மக்களின் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு டெங்கு பரவக் கூடிய சுற்றாடலை வைத்திருப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு நோயால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான விடயங்களை சுற்றிக் காட்டியும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.
Post a Comment