Header Ads



கல்முனை மேயருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு


(அகமட் எஸ். முகைடீன்)

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளிற்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் கிறிஸ்டின் றொபிச்சன் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் நேற்று (04.06.2013) மாநகர சபைக்கு வருகை தந்தார்.

இதன்போது கல்முனை மாநகர சபையின் நடவடிக்கைகள் மற்றும் இங்கு வாழும் சமூகங்களுக்கிடையில் காணப்படும் இன நல்லுறவு போன்ற விடயங்கள் தொடர்பாக முதல்வரினால் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.  அத்தோடு கல்முனை மாநகரத்திற்கான மாநகர அபிவிருத்தி திட்ட வரைபு முதல்வரினால் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.