Header Ads



'அறிவுச்சுரங்கம்' நிகழ்வில் ரவூப் ஹக்கீம் (படங்கள்)


(J.M.Hafeez)

இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய ஐந்து துறைகளுள் கல்வியும் ஒன்றாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐம்பெரும் துறைகளில் நாட்டை அபிவிருத்தி செய்யத்திட்டமிட்டுள்ளார். அதில் ஒரு துறையாக கல்வித்துறை விளங்குகின்றதென நீதி அமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.

(1.6.2013) கண்டி மாவட்ட தமிழ் மொழிப்பாடசாலைகளுக்கிடையே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய 'அறிவுச்சுரங்கம்' கல்வி நிகழ்ச்சியில்  பரிசளிப்பு வைபவம் மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பற்ற போது பிரதம அதிததியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது,

இலங்கையில் மேற்கொள்ளபட்டுவரும் மாபெரும் மாற்றங்களில் ஒன்றாக கல்வியும் இனம் காணப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இலங்கையின் கல்வியில் பாரிய மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எமது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா அவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்விக்காக இலங்கையை நாடி வரும் நிலை உருவாக்கப்பட வேணடு மென்ற முயற்சியில் அயராது பாடுபட்டு வருகிறார்.
பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது யப்பானுக்கு அடுத்த படியாக எமது நாடு எழுத்தறிவு கொண்ட மக்களைக் கொண்ட நாடாக அறியப்பட்டுள்ளபோதும் தொழில் நுடபக் கல்வித்துறையில் எமது நிலைமை காத்திரமாக இல்லை என்று குறிப்பிட்டார்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணிக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்ற கல்ஹின்ன அல் மனார் மகாலித்தியாலய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. புரவலர் ஹாசிம் ஒமர் உற்பட இன்னும் பலர் இதில் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.