Header Ads



கால்கள் செயலிழந்த பெண் கடலில் நீந்தி சாதனை

லண்டன்:இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து, அதன் மூலம் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.பிரிட்டனைச் சேர்ந்தவர், சூ ஆஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால், இவரது இரு கால்களும் செயல் இழந்தன.எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின், தான் கற்றிருந்த நீச்சல் மீது, அலாதியான காதல் கொண்டிருந்தார். இதனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார். இதையடுத்து, தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைத்தார்.இதன் மூலம், மீண்டும் நீச்சல் பழகிய ஆஸ்டின், கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார். இவர் தயாரித்த நாற்காலியில், விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும்.இதனால், தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட, தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும், ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.