அஸாத்சாலியின் மக்கள் சந்திப்பை குழப்ப கிழக்கு முதலமைச்சர் முயற்சி
(மௌபீர் - அஸாத் சாலியின் ஊடகப்பிரிவு)
ஓட்டமாவடியில் இன்று மாலை அஸாத்சாலி பங்கேற்கவுள்ள மக்கள் சந்திப்பை குழப்ப இறுதிக்கட்ட முயற்சிகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவரது செயலாளர் என்று குறிப்பிடப்படும் லண்டன் மஃறூப் என்ற நபர் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தற்போது அங்கு நிலைகொண்டுள்ள அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
நேற்று சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு அமோக வெற்றியளித்துள்ளது. எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் அங்கு திரண்டு வந்து அஸாத் சாலியை சந்தித்துள்ளனர்.இதனால் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அரசியல் வாதிகள் சற்று தடுமாற்றம் அடைந்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
இந்நிலையில் இன்றைய ஓட்டமாவடி சந்திப்பை தடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் உதவி நாடப்பட்டு அவரும் தனது செலாளரைத் தூண்டிவிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
ஓட்டமாவடி கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு லண்டன் மஃறூப் ஏற்கனவே அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.கூட்ட ஏற்பாடுகளைக் கைவிடுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்துக்கான மண்டப அனுமதி பொலிஸ் அனுமதி என எல்லாவிதமான சட்ட ரீதியான அனுமதிகளும் பெறப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான முறையில் அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தல்கள் தன்னிடம் பலிக்கப்போவதில்லை என்றும் திட்டமிட்டபடி இந்தக் கூட்டம் நடந்தே தீரும் என்றும் அஸாத் சாலி சற்று முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார். ஒருவேளை அராஜக முறையில் இந்தக் கூட்டம் தடுக்கப்டுமானால் தனது ஆதரவாளர்கள் சகிதம் ஓட்டமாவடி நகரைச் சுற்றி; ஊர்வலமாக வருவதற்கும் தான் தயாராக உள்ளதாகவும் அதில் தன்னோடு பிரதேச மக்களும் இணைந்து கொள்ளுமாறும் அஸாத் சாலி அழைப்பு விடுத்துள்ளார்.அது மட்டுமல்ல நாளை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சொந்த ஊரான கிண்ணியாவிலும் தான் மக்களைச் சந்திப்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கேவலமான போக்கை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகள் உடனடியாகக் கை விட வேண்டும்!
ReplyDeleteமுதலமைச்சர் நஜீப் அவர்களே..! உங்களுக்கு மக்கள் வாக்களித்தது இந்த வேலைக்குத்தானா? உங்களின் செயலாளர் லண்டன் மஹ்றூபுக்கு ஊங்களின் முதலமைச்சர் அலுவலகத்தில் வேறு வேலை இல்லையா?
காத்தான்குடியில் ஒரு நரி என்றும், அக்கரைப்பற்றில் ஒரு கெரியன் என்றும் பேச வைத்த ஆஸாத் சாலியின் வாயால் திருகோணமலையில் ஒரு புலி என்றும் பேச வைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
உங்களின் தந்தையுடன் கொழும்பு சாலிமார் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்து அக்காலத்தில் ஊடகங்களுக்கு அறிக்கை எழுதிய அனுவத்தை வைத்து அவருக்குப் பின்னால் இந்த நாடு கண்டிருக்கும் ஒரு சமூகப்பற்றுக் கொண்ட அரசியல்வாதியாக ஆசாத் சாலியை நான் பார்க்கின்றேன்!
அவரது உரையால் அவர் அரசியலில் உயர்ந்த அந்தஸ்துப் பெறா விட்டாலும், முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் அவரது பேச்சுக்கள் பிற்காலத்தில் பேசப்படும் என்பது மட்டும் நிச்சயம்!!
எனவே இப்படியான கேவலமான செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு அவரது பேச்சுக்களை மக்கள் கேட்க வழி செய்யுங்கள்!! அதுவே உங்களுக்கு கௌரவம்!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-