Header Ads



சாய்தமருதுவின் பெயர் பலகை எங்கே..?

(ஏ.எல். ஜுனைதீன்)

    வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாட்டிலுள்ள நகரங்கள், கிராமங்கள் தோறும் ஊரின் எல்லையைக் காண்பிக்கும் நோக்கமாக ஊரின் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசத்தில் சாய்ந்தமருதின் எல்லைப் பகுதியில் நடப்படாதது குறித்து இப் பிரதேச மக்கள் கவலை தெரிவிப்பதுடன், இப் பெயர் பலகை இவ்வூரில் நடக்கூடாது என அரசியல்வாதிகள் யாராவது தடை விதித்துள்ளனரா? எனவும் கேள்வியும் எழுப்புகின்றனர்.

    இக்கிராமத்தில் ஆரம்ப காலத்தில் நடப்பட்டிருந்த “சாய்ந்தமருது” என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த பெயர் பொறிக்கப்பட்ட கல்லும் கூட அகற்றப்பட்டிருப்பதும் இம்மக்களுக்கு வேதனை தரும் விடயமாக இருந்து கொண்டிருக்கிறது.

    இம்மாவட்டத்தில் நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை. கல்முனை, பாண்டிருப்பு என சகல ஊர்களுக்கும் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை நடப்பட்டிருந்தும் ஏன் சாய்ந்தமருதில் இப் பெயர்ப் பலகை நடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

    அம்பாறை மாவட்டத்தின் மிகப் பழையதும் சனத்தொகை கூடியதுமான சாய்ந்தமருது கிராமம் தனியான ஒரு பிரதேச செயலகப் பிரிவுமாகும் இக்கிராமத்தில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியாக முஸ்லிம் மக்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இக் கிராமத்தில்தான் இலங்கையின் முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஆசிரியை பாத்துமுத்து ஹலால்தீன், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் பல்கலைக் கழக வேந்தர் தேசபந்து ஜெஸிமா இஸ்மாயில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.என். மைமூனா  ஆகியோர் பிறந்து முஸ்லிம் சமுகத்திற்கு புகழ் தேடித் தந்திருக்கிறார்கள்.

    இது மாத்திரமல்லாமல் சாய்ந்தமருது கிராமம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு கிராமம் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

    கடல் வழியாக வந்த ஒல்லாந்தக் குழுவினர் இலங்க்கையில் முதன் முதலாகக் காலடி வைத்த இடம் சாய்ந்தமருது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது 1602 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஒல்லாந்தரது கப்பலொன்றின் தளபதியான ஜொரிஸ் வான் ஸ்பில் பேர்கன் என்பவரே சாய்ந்தமருதில் தரையிறங்கி, பின்னர் சம்மாந்துறையில் தங்கியிருந்து அங்கிருந்து கண்டிக்குச் சென்று முதலாம் விமல தர்ம சூரியன் மன்னனைச் சந்தித்தான்.இப்பயணத்தின் போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தான் சந்தித்த சோனகர் (Mooren)  மற்றும் துலுக்கர் (Tureken) பற்றியும் தனது நாட் குறிப்பேட்டில் விபரித்துள்ளான். (Journal of Spilbergen 1602- Translation by K.D. Paranavitane-1997 Page 23 ) எனவும் ஆதாரம் காட்டப்படுகின்றது.

    இப்படியான பல முக்கியத்துவங்கள் உள்ள சாய்ந்தமருதின் எல்லையைக் காட்டுவதற்கு ஊரின் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை இது வரை நடப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கான பதிலை இப்பிரதேச அரசியல்வாதிகள்தான்  கூறவேண்டும்.

6 comments:

  1. இதற்கு நிச்சயமாக ஒரு அரசியலே காரணம் அன்றி வேறு ஏதுமில்லை. அந்த அரசியல்வாதி/கள் யார் என்பதை சாய்ந்தமருதில் பிறந்த ஒவ்வொரு மகனும் அறிவான். சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு தோரணையில்கூட சாய்ந்தமருது உங்களை வரவேற்கிறது என்று எழுதுவதை தடுத்து நிறுத்தினார்/கள். இவ்வாறான புறக்கணிப்புக்களாலும் திட்டமிட்ட அரசியல் செயற்பாடுகள் காரணமுமாகவே தனிப்பிரதேச சபை என்ற கோசமும் கோரிக்கையும் இன்று வலுப்பெற்று உள்ளது. உண்மைலேயே அதுவே இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும்...

    ReplyDelete
  2. பெயர் பலகை நாட்ட மோயர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    1. ஒன்று, காரைதீவு வழியாக கல்முனை வீதியில் (மாளிகைக்காடு சந்தியில்)

    2. மற்றொன்று, கல்முனை வழியாக காரைதீவு வீதியில் (சாய்ந்தமருது கார்கில்ஸ் அருகில்)

    இந்த 2 இடங்களிலும் அதிரடியாக நடப்பட வேண்டும்.

    இது கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் அவர்களின் கவனத்துக்கு....

    ReplyDelete
  3. கொட்டச் சிரட்டக்க குதுரை ஓட்டுறதத் தவிர வேறு ஏதாவது.......... தேசம் தேசியம் சர்வதேசம் முஸ்லிம் உம்மா என்றெல்லாம் உங்களுக்கு சிந்திக்க வராதா ? வித்தியாசமான கிழக்கின் வெற்றிலை.....

    ReplyDelete
  4. If it is famous place in sri lanka why do we want to worry about name board. We still thinking in a narrow mind. come out from narrow mind think out of the box. we have to think in broad mind. forget about our rural thinking.

    ReplyDelete
  5. சாய்ந்தமருதுவுக்கு மட்டுமல்ல மேலும் சில முஸ்லிம் ஊர்கலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை புறக்கணித்துள்ளது அவட்டில் சில மருதமுனை, பாலமுனை, அஷ்ரப் நகர் போன்றனவும் அடங்கும் இது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது ஏனெனில் இப்பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது பல முறை இதி தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுபடாதிருப்பது சந்தேகத்திற்குரியதே

    ReplyDelete
  6. இதை தட்டிக்கேட்க நாதியற்ற அரசியல் வாதிகளும், முதுகெலும்பில்லாத அரசியல் வாதிகளுக்காக கோஷம் போட்டு, அவர்களுக்க ஓட்டுப் போடும் மக்களும் சிந்திக்க வேண்டிய விடயம். செய்தி தந்த ஏ.எல். ஜுனைதீனை வாழ்த்துகின்றேன். முடியுமானவர்கள் இதைப் பற்றி சிந்தித்து செய்தி எழுதியரை பாராட்டுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.