Header Ads



எனக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே பக்கபலமாக இருந்தனர் - பள்ளிவாசலில் அமைச்சர் நிமால்


(மொஹமட் பாயிஸ்)

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் 30 வருட அரசியல் வாழ்க்கையை நினைவு கூறும் முகமாக பதுளையில் இன்று இடம்பெறும் விசேட நிகழ்வையொட்டி நேற்றிரவு பதுளை ஜும்மா பள்ளிவாசலில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு விசேட வரவேற்பும், துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதனை பதுளை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

நேற்றிரவு மஃரிபு தொழுகையை அடுத்து பள்ளிவாசலுக்கு வருகை தந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நிர்வாக சபையினர் வரவேற்றனர். அதனையடுத்து பள்ளிவாசல் தலைவர் இம்டியாஸ் பகீர்டீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதன் போது பதுளை பகுதிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செய்துள்ள சேவைகள் பற்றி முஸ்லிம்கள் விடயத்தில் அமைச்சர் மேற்கொள்ளும் அக்கரையையும் நினைவூட்டி அமைச்சரை பாராட்டினார். 

அதனையடுத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றும் பொழுது,

எனது அரசியல் வாழ்க்கையில் முதலாவது கட்டங்களை முஸ்லிம் அரசியல்வாதிகளே எனக்கு பக்கபலமாக இருந்தனர். பௌத்த மதத்தை கொண்ட நான் ஏனைய சமயங்களை மதிப்பதோடு சமயங்களோடு நற்புறவுடன் செயற்பட்டு அரசியல் பயணத்தை தொடர்வதே எனது நோக்கம். அதனை தவிர்ந்து சமயத்தை எனது அரசியலுக்காக ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. 

இந்த நாட்டில் பௌதீக வளங்களின் அபிவிருத்தியை போன்று மனிதர்களின் உள்ளங்களிலும் ஆண்மீக அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி அவர்களின் சிந்தனையாகும். அதன் போதே ஒருவரையொருவர் கொடூர நோக்கோடு நோக்காது அனைவரையும் அன்புடனும், சமாதானத்துடனும் நோக்கும் மக்கள் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதே எமது பிரதான நோக்கமாகும், அந்த வகையில் எனது அரசியல் பயணத்திலும் முஸ்லிம்கள் என்னும் அன்யோன்யமாக கைகோர்த்து செயல்பட்டிருப்பதை இந்த நேரத்தில் நினைவு கோருகின்றேன் என்றார். 

இந்நிகழ்வின் போது மாகாண சபை உறுப்பினர்கள், பதுளை மாநகர முதல்வர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தினர், உலமாக்கள் என பல்வேறு பகுதியினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி துஆ பிராத்தனை மௌலவி ரஸாத் நடாத்தி வைத்தார். 



No comments

Powered by Blogger.