Header Ads



ரொட்டவௌ கிராம முஸ்லிம்களுக்கு விடிவு ஏற்படுமா..?

(அப்துல்சலாம் யாசீம்)


தற்போது இக்கிராமத்தில் வசித்து வருகின்ற 450 குடும்பங்களைச் சேர்ந்த நெருங்கிய உறவுகளே இக்கிராம மக்கள்!

இக்கிராமத்துக்கு முதலில் வந்த மூதாதேயர்களின் நோக்கம் விவசாயத்தை மேற்கொள்வதற்காகவே. தொழில் ரீதியாக வந்து மரத்திற்கு கீழே கூடாரங்களை அமைத்துக்கொண்டு காட்டு வனாந்திரமாக காணப்பட்ட இப்பகுதியை வெட்டி துப்பரவு செய்து இருப்பிடத்தை உறுதிப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தவர்களின் பரம்பரையர்களே இக்கிராமத்தவர்கள்.

காட்டு மிருகங்களை தனது வாய் பேச்சின் மூலம் திசை திருப்பிய மூதாதேயர்கள் பல கஸ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் உண்பதற்கு உணவின்றி 03 நேர உணவுக்கு பதிலாக ஒரு நேர உணவை உட்கொண்டு கிராமத்தை பாதுகாத்து வந்தவர்கள்!

பரம்பரை பரம்பரையாக வரும் சந்ததியினருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல வழிமுறைகளையும் காட்டிக்கொடுத்தவர்கள். தாம் விவசாயத்தை நம்பி வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ரொட்டவௌ கிராமத்தில் குடியிருப்பை உறுதிப்படுத்திக்கொண்;டு காட்டு வழியீனு_டாக இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள  புலியங்குளம் பகுதிக்குச் சென்று விவசாயத்தையும்,சேனைப்பயிர்ச்செய்கையையும் மேற்கொண்டு வந்ததாகவும் இக்கிராமத்தில் உள்ள வயது முதிர்ந்த மூதாதேயரான அவ்வா உம்மா தெரிவித்தார்.

1928ம் ஆண்டு இக்கிராமத்துக்கு வந்து ஒரு வருடத்துக்கு பின்னர் புலியங்குளம் எனும் காட்டுப்பகுதிக்கு சென்று சிறிய காடுகளை வெட்டி சேனைப்பயிர்செய்கையையும் விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தனர். அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் திருத்தப்பட்ட விவசாயக்காணிகளை நெற்செய்கைக்காக பயன்படுத்துவதற்கு வனவள அதிகாரிகள் தடை விதிக்கின்றனர்.

யுத்தம் காரணமாக விட்டுச்சென்ற இந்நிலங்களை யுத்தம் முடிவடைந்த பின்னராவது விவசாயம் செய்வதற்கு தடைவிதிப்பது தங்களின் மூதாதேயர்கள் வியர்வை சிந்தி உண்பதற்கு உணவின்றி பசியுடன் வெட்டிய நிலங்களை பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தழிப்பதற்காகயா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

புலியங்குளம் பகுதியில் 46 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு குளங்களையும் (சின்ன புலியங்குளம், பெரிய புலியங்குளம்) புணரமைத்து  மூன்று கிலோமீட்டர் விவசாய வீதி என புணரமைத்து செய்த பகுதியை ஏன் தற்போது வனவள அதிகாரிகள் செல்ல விடாது தடை விதிக்கின்றனர். புலியங்குளம் பகுதிக்கு ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நாகொல்லாவ எனும் காட்டுப்பகுதியை யுத்தம் முடிவடைந்த பின்னர் வெட்டி துப்பறவு செய்து பெரும்பான்மையினத்தவர்கள் விவசாயம் செய்கின்றார்கள்.

அவ்விவசாயிகளுக்கு தடை விதிக்காமல் ஏன் முஸ்லிம்களின் நிலங்களுக்கா தடைவிதிக்கவேண்டும் எனவும் அக்கிராம விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.அத்துடன்  அக்காணிகளுக்குச்செல்லும் வீதி புணரமைக்கப்பட்டும்,குளங்கள் இரண்டும் கமநெகும, மகநெகும திட்டத்தில் புணரமைக்கப்பட்டும் ஏன் தற்போது மேய்ச்சல் நிலம் என அரச அதிகாரிகள் கூறுகின்றனர். ரொட்டவௌ கிராமத்தை எடுத்துக்கொண்டால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் நு_ற்றுக்கு ஐந்து பேரே காணப்படுகின்றனர். விவசாயம் செய்யக்கூயெவ்களே அதிகம் உள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் பொய்யான கருத்துக்களை கூறி நிலங்களை விவசாயம் செய்யாமல் தடுக்கின்றனர். எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து அக்கிராம வாசியான ஏ.வெள்ளத்தம்பி தெரிவித்ததாவது-1967ம் ஆண்டு நான்காம் மாதம் தொடக்கம் காணியை துப்பரவு செய்து 10ம்மாதம் நான்கு மாத நெல் பயிர் செய்தேன்.மூன்று ஏக்கர் காணியில் ஆறு பூசல் நெல் விதைத்து 180 பூசல் நெல் எடுத்தேன்.அதே போல மூன்று தடவைகள் விவசாயம் செய்து வந்தேன். 1970ம் ஆண்டு Nஐ.வீ.பி குழப்பம் ஏற்பட்டது.அங்கிருந்து புறப்படுமாறு எங்களுக்கு சொன்னார்கள். அதனால் அக்காணிகளை விட்டு வெளியேறினோம்.

நாங்கள் யுத்த காலத்தில் விவசாய நிலங்களை பயத்திற்காக விட்டு வந்தோம்.யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டு குளங்கள் கட்டப்பட்டது.அதன் பிறகு விவசாயம் செய்யலாமென எமக்கு சொந்தமான காணிப்பகுதிக்கு போய் துப்பறவு செய்தேன்.அதே நேரம் வனவள அதிகாரிகள் வந்து அரசுக்கு சொந்தமான காணியென கூறி வழக்கு தாக்கல் செய்தனர்.

யுத்தகாலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சேர்க்க முடியவில்லை.இருந்தபோதிலும் 1967ம் ஆண்டு செய்த விவசாயக்காணி கிடைக்கும் என எதிர்பார்த வண்ணம் இருக்கின்றேன். புலியங்குளம் காணிப்பகுதிக்கு ஒரு கிலோமீட்டருக்கு மேலுள்ள நாகொல்லாவ எனும் காணியை பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது இருபோகங்களும் செய்து வருகின்றார்கள்.ஆனாலும் முஸ்லிம்களாகிய எங்களுடைய காணியை செய்வதற்கு சென்றால் அரச காணி என சொல்கின்றார்கள். எனவே நாங்கள் அன்று காணிக்காக பட்ட கஸ்டத்துக்காகயாவது எங்களுக்கு சொந்தமான காணியை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதனையடுத்து ஆர்.அகமது லெப்பை இவ்வாறு தெரிவித்தார்.கடந்த 1963ம் ஆண்டு காட்டுவழியாக புலியங்குளம் பகுதிக்கு விவசாயம் செய்வதற்காக சென்று சிறிய காடுகளை வெட்டி சேனைப்பயிர்ச்செய்கையையும், ஒரு போக விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தேன். காணிகளை துப்பரவு செய்து நான்கு, ஐந்து வருடங்களுக்குப்பிறகு  வரம்பு போட்டு காவல் இருந்தோம். 1970ம் ஆண்டு  ஐ.வி.பி குழப்பம் ஏற்பட்டு அவர்களினால் தாக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு அப்பகுதியை விட்டு வந்தோம். அதனை தொடர்ந்து 1980ம் ஆண்டு,81ம்,82ம் ஆண்டு காலப்பகுதிகளில் மீண்டும் விவசாயம் செய்வதற்காக சென்றேன். விவசாய பயிர்ச்செய்கையை தொடர்ந்த வேளை எல்.டி.டி பிரச்சனை ஏற்பட்டது.அதனையடுத்து இரானுவத்தினால் அக்காணிப்பகுதியை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டு வீடு திரும்பினோம். தற்போது முதிய வயதை அடைந்து விட்டேன்..வயல் செய்ய முடியாது. ஆகவே நான் வியர்வை சிந்தி பாடுபட்டு துப்பறவு செய்த காணியை எனது பிள்ளைகளுக்காவது வழங்க வேண்டும் என அரசியல் வாதிகளையும், அரச அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கின்றேன். எனவும் தெரிவித்தார்.

மேலும் அச்சிக்கண்டு முத்தலிப் புலியங்குளம் காணி தொடர்பாக விபரிக்கையில்- எனக்கு வயது 65 நான் ரொட்டவௌ கோன்கஹவத்த எனும் இடத்தில் பிறந்தேன். புலியங்குளம் பகுதிக்கு காட்டு வழியாக நடந்து வாப்பாவும்,தம்பிமார் நான்கு பேரும் இன்னும் இரண்டு மூன்று பேருடன் சென்றேன்.போகும் போது லந்து என்று சொல்லப்படும் சிறிய காடு காணப்பட்டது. எங்களுக்கு முதல் இருந்த உறவினர்கள் சேனைப்பயிர்ச்செய்கை செய்து இருந்ததை நாங்கள் வரம்பு போட்டு மண் வெட்டியினால் கொத்தி நெல் விதைத்தோம். ஒரு வருடகாலம்!

அதன்பிறகு  மூன்று தரம் விவசாயம் செய்தோம். பிறகு எல்.டி.டி குழப்பம் வந்தது.அதோட அப்பகுதிக்கு செல்லவில்லை. நாங்கள் அப்போது போட்ட வரம்பு இப்பவும் இருக்கு!

எனது குடும்பத்தில் நான்கு பெண் பிள்ளைகளும் ஆறு ஆண் பிள்ளைகளும் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்களுக்கு சொத்துக்கள் கொடுப்பதற்கு கூட காணிகள் இல்லை. நான் துப்பரவு செய்த காணிக்கு ஏன் உரிமையாளரான என்னை போக வேண்டாம் என வனவள அதிகாரிகள் சொல்கின்றார்கள். இதற்கு அரசியல்வதிகள் மௌனம் சாதிப்பது ஏன். எங்களுக்குறிய காணியை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

1977ம் ஆண்டு புலியங்குளம் பகுதியில் விவசாயம் செய்வதற்கு ஐனாதிபதியாக ஐயவர்தன இருந்த காலப்பகுதியில் ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் மூன்று ஏக்கருக்கும் 1500 ரூபாய் தந்தார்கள்.அந்த காசியில் விவசாயம் செய்து இலாபம் பெற்று நான் 1977ம் ஆண்டு எட்டாம் மாதம் ஹொரவ்பொத்தானை,கிவுளக்கடை பகுதியில் திருமணம் செய்தேன். அன்றைய அரசினால் கடன் வழங்கி விவசாயத்தை ஊக்குவித்த எமக்கு ஏன் தற்போது அக்காணிக்கு செல்ல தடை விதிக்கப்படுகின்றது என அஸீஸ் கேள்வியாக கேட்டார்.

அதனைத்தொடர்ந்து யூ.nஐhஹரா உம்மா இவ்வாறு கூறினார். நானும் எனது கணவரும் ரொட்டவௌ கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள புலியங்குளம் எனும் பகுதிக்கு ஐந்து பேர் ஒன்றாகச்சேர்ந்து நடையாக சென்றோம். ஐந்து வருட காலம் காட்டை துப்பரவு செய்து நெல் பயிர்ச்செய்கையை மேற்கொண்டோம். யுத்தம் வந்தது. அதனால் புலியங்குளம் வயல் காணியை விட்டு வந்தோம்.அன்று பட்ட கஸ்டத்துக்கு பயன் ஒன்றும் இல்லை.எனது கணவரும் மௌத்தாகி விட்டார். நானும் கணவரும் ஒரு நேர சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வெட்டி துப்பறவு செய்த காணிகளை ஏன் தாராங்கள் இல்லை. எனவே அக்காணியில் பட்ட கஸ்டத்துக்காவது அதில் விவசாயம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என அத்தாய் கவலையுடன் தெரிவித்தார்

1 comment:

  1. muslim arasiyal wathikal allam unga uruku wara mataga umma
    namma pashi kotuma awagaluku theriyathu
    namma samukatha kakka ponantu than nanga ninachchom aana awanga nalla sokuzu walkaya kantu alai makkala maranthutanga

    ReplyDelete

Powered by Blogger.