விசேட தேவையுடையவர்களுக்கிடையில் 'இனைஞர் பரிமாற்று சிநேகபூர்வ சந்திப்பு'
(அனா)
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையில் 'இனைஞர் பரிமாற்று சிநேகபூர்வ சந்திப்பு' எனும் வேலைத்திட்டத்தில் கண்டி மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள விசேட தேவையுடையவர்களை வரவேற்கும் நிகழ்வு (02.06.2013) இடம்பெற்றது.
ஓட்டமாவடி காவத்தமுனையில் அமைந்துள்ள விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கான பகல் நேரக் காப்பகத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைசர் ஹாபிஸ் அஹமட் நஸீர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.முஸ்தபா, இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், காவத்தமுனை விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கான பகல் நேரக் காப்பகத்தின் ஸ்தாபகர் எம்.பி.எம்.சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் இருந்து விசேட தேவையுடைய மாணர்கள் ஐம்பது (50) மாணவ மாணவிகள் வருகை தந்துள்ளதுடன்இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து மாவட்டத்தின் முக்கிய பிரதேசங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி காவத்தமுனையில் அமைந்துள்ள விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கான பகல் நேரக் காப்பகத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.
Post a Comment