Header Ads



ஆளில்லா விமானம் மூலம் 'பிட்சா' விநியோகம்..!

'பிட்சா' தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான 'டோமினோஸ்' ஆளில்லா விமானம் மூலம், விரைவாக பிட்சாக்களை டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

இதன் மூலம் 4 மைல் சுற்றளவு கொண்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் சுடச்சுட சுவையான பிட்சாக்களை டெலிவரி செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

8 இறக்கைகளுடன் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை இதற்கான சோதனை முயற்சிக்காக பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானங்களில் அடிப்பகுதியில் பிட்சா டெலிவரி பையன்கள் கொண்டு செல்வதைப் போன்ற 'இன்சுலேட்' செய்யப்பட்ட பைகளின் மூலம் பிட்சாக்களை டெலிவரி செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

'டோமிகாப்டர் டிரோன்' எனப்படும் இந்த ஆளில்லா விமானங்களை 'ஏரோ சைட்' என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

அமெரிக்காவில், தரை மட்டத்தில் இருந்து 126 மீட்டர் வரை சிறியரக விமானங்கள் பறப்பதற்கு தடை ஏதுமில்லை என்பதால் இந்த திட்டம் தங்களது வியாபார வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும் என டோமினோஸ் கருதுகிறது.

மின்னணு சக்தியில் இயங்கும் திசைகாட்டி, இடங்களை வரைபடத்தின் வாயிலாக புரிந்துக் கொள்ளும் ஜி.பி.எஸ். கருவி ஆகியவை இந்த ஆளில்லா விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

'தரையில் இருந்தபடியே ரிமோட் மூலம் இந்த விமானங்களை இயக்கி, குறுகிய நேரத்தில் பிட்சாக்களை டெலிவரி செய்யும் உலகின் முதல் சாதனை முயற்சி நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை' என்று டோமினோஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நம்பிக்கையுடன் கூறுகிறார். 

No comments

Powered by Blogger.