பௌத்தர்களுக்கு மட்டுமே இலங்கை உரித்தானது என்று கோஷமிடுவது அறிவுபூர்வமானதல்ல
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கை நாடு இங்கு வாழும் சகலருக்கும் சொந்தமானது. இந்நாட்டுக்கு யாரும் தனி உரிமை கோர முடியாது.அப்படிக் கோரினால் அது அவர்களின் அறியாமையேயாகும்.என கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சர்வ மத அமைப்புக்களைக் கலைத்து விட வேண்டும் என்ற கருத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.வண. ரண்முத்துகல சங்கரத்தினதேரரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
முப்பது வருடங்களுக்கு மேலாக நாட்டில் தலைவிரித்தாடிய யுத்தத்தினால் சின்னாபின்னமாகவிருந்த இன உறவை மீண்டும் கட்டியெழுப்பி சமாதானத்தை நிலவச் செய்ததில் சர்வமத அமைப்புக்களுக்கு பெரும் பங்கு உண்டு. நாட்டிலுள்ள சர்வமத அமைப்புக்கள் தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சிலர் கூறுவது போல் சர்வமத அமைப்புக்கள கலைத்து விட்டால் நாட்டில் மீண்டும் கலவரமும் யுத்தமும் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நாடு யுத்தத்துள் சிக்குண்டிருந்த வேளையில் இவர்கள் எங்கே இருந்தார்கள். இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த பெரு முயற்சியின் காரணமாக இன்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கும் யுத்தத்தை வென்ற படையினருக்கும் நன்றி கூற வேண்டும். நாட்டை மீட்ட பின் நிலை குலைந்திருந்த இன உறவை மீட்டெடுத்த பெருமை சர்வமத அமைப்புக்களையே சாரும்.
இன்று நாட்டில் அமைதி நிலவுகிறதென்றால் ஆங்காங்கே உள்ள சர்வ மத அமைப்புக்களின் செயற்பாடுகள்தான் காரணம் எனலாம். சர்வ மத அமைப்புக்களின் ஸ்திரமான நடவடிக்கைகளால் இருக்கின்ற ஒரு சில இனவாதிகள் மௌனமாயிருக்கின்றனர் அதனால் அமைதி நிலவுகிறது. இந் நிலையில் மீண்டும் இனங்களிடையே குழப்பத்தையும் பிரச்சினையையும் ஏற்படுத்தும் வகையில் சர்வ மத அமைப்புக்களை கலையுங்கள் இது பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்று கோஷமிடுவது அறிவுபூர்பமானதல்ல.
புத்த பகவான் பஞ்சீலம் அட்டசீலம் என நல்ல விடயங்களையே இவ் உலகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார். அதன்படி நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைகளில் ஒன்று நாட்டில் சர்வ மத அமைப்புக்களினூடாக சர்வ சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும் அதற்கமைய நாட்டில் சில சர்வ மத அமைப்புக்கள் எத்தனையோ அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் சமய நல்லிணக்கத்தை தோற்றுவித்து வருகின்றன. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியும் சமாதானமும் நிலவுகின்றது.
அன்புதான் இன்ப ஊற்று வன்முறையை வன்முறையால் ஒரு போதும் வெல்ல முடியாது.எந்த சமயமும் மறு சமயத்தை நிந்திக்குமாறு கோரவில்லை. சமயங்கள் அன்பு மொழியை போதிக்கின்றன சமயத் தலைவர்கள் அன்பு மொழியையே பேச வேண்டும்.
இந் நிலையில் சர்வ மத சமய அமைப்புக்களைக் கலைக்கும்படி கோருவது இந்நாட்டை மீண்டும் ஒரு யுத்தத்திற்கும் அமைதியின்மைக்கும் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை மக்கள் புரிந்துணர்வுடன் சந்தோசமாகவே வாழ விரும்புகின்றனர் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் மற்றவர்களின் மனங்களை ஒரு போதும் புண்படுத்தக் கூடாது சமாதான சூழலை குழப்ப வேண்டாம் மனித வாழ்வியல் காலம்குறுகியது அதற்குள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் குரோதத்தை வளர்த்து வாழ்வைக் குழப்ப வேண்டாம். நாம் ஒரு தாய் மக்களே என்றும் தெரிவித்துள்ளார்.
சங்க ரத்னா தேரர் உண்மையை உண்மையாக சொல்லி இருக்கிறார். அவருக்கு முஸ்லிம் சமூகம் நன்றி கூற கடமை பட்டுள்ளது.
ReplyDeleteசரி தேரரே இதை நீங்கள் முஸ்லிம்களிடையே சொல்வதனால் ஒருபயனும் இல்லை சொல்வதென்றால் யார் குழப்பிக்கொண்டிருக்கின்றார்களோ அவர்ளிடம் சொல்லுங்கள் பார்கலாம் நியாயம் கிடைக்கின்றதாவென்று....
ReplyDeleteYes itudan unmaiy
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் தேரர் அவர்களே..., உங்களால் கல்முனை மக்கள் ( எல்லா இன ) பெருமையும் அமைதியாகவும் வாழ்கிறார்கள்.
ReplyDelete