சிங்கள பௌத்த மாட்டிறைச்சிக்கு பதிலாக..!
காமினீ வியங்கொட
(தமிழாக்கம் - ஜே.எம்.ஹாபீஸ் இ மொஹொமட் ஆஸிக்)
பசுவதை என்பது இந்து மதத்தில் உள்ளது. பௌத்த மதம் சகலவித மாமிசங்களையும் உண்பதையும் விரும்ப வில்லை. அதில் நெத்திலிக்கருவாடும் அடங்கும். வெசாக் போயாதினம் பௌத்தர்களுக்கு முப்பெரும் திருநாளாகும். புத்தரின் பிறப்பு, புத்தமயமாதல், பரிநிர்வாணமாதல் (மோட்சம்) என்ற விடயங்கள் அத்தினத்தில் நினைவு கூறப் படுகிறன. இந்த மூன்று நிலைகளும் பௌத்தர்களுக்கு மத்தியில் சாந்தமாக உணரப் படுகிறது. அது குளிர்ச்சியானது. நெருப்பு அதற்கு எதிர் மறையானது. காவி உடை அணிந்து கொண்ட போவத்தே இந்திரரத்ன என்ற நபர் காவி உடைக்கு (சிவுர) தீவைத்துக் கொண்டார்.
அவ்வாறு செய்தது இலங்கை பௌத்தர்களின் அதி புனிதமான தலதா தாளிகையின் முன்பாகும். அதன் மூலம் அவர் செய்தது தூய்மையான பௌத்த தத்துவத்தின் சாந்தத்தன்மையையும் குளிர்ச்சியையும் சிங்கள பௌத்தர்களது மரபுரீதியான புனிதத்தன்மையை ஒரே நேரத்தில் மாசுபடுத்துதியதாகும். இதனை வீரம் என்றோ அல்லது புனிதம் என்றோ ஒருவர் நினைப்பாராயின் அப்படி நினைப்பவர் மரணித்தவரை விடவும் படுமோசமானவராவார். அவர் பௌத்தரல்லாதவராவார். ஏனென்றால் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டவரின் கொடுமையான செயலை இவரும் மதிப்பளித்து அதனை நினைவு கூறுவதாகும்.
தீக்குளித்தவரின் தந்திரமான விடயத்தை அனுமதிப்பவர் தீக்குளித்தவரை விடப் பயங்கரமானவராகும்.
சிங்கள பௌத்தத்தின் அடிப்படைச் சுபாவமாவது புத்தரின் தர்மத்தை விட இனத்தை அல்லது கோத்திரத்தை உயர்வாகக் கருதுவதாகும். அங்கு இனத்தைப் பிரகாசமடையச் செய்வதற்காக பௌத்த தர்மத்திற்கு தீ மூட்டுவதாகும். இந்திர ரத்னவின் மரணித்த சடலத்தை சுற்றி காகங்கள் வலம் வருவது போன்று அரசியல் வாதிகளும் வலம் வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் இங்கு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்றாகும்.
சமயத்தின் பெயரால் அரசியல் பலத்தை சுவைப்பது பௌத்த சமயத்திற்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. ஏனைய சமயங்களும் அப்பணியை கச்சிதமாக அனுபவித்த சரித்திரங்கள் உண்டு. இருப்பினும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட புத்தசமயம் இம்சையை விடயதானமாக்கிக் கொண்டு அன்றாட அதிகாரப் போராட்டத்தை முன் எடுப்பதைப் பார்க்கும் போது எதுவுமே எஞ்சி இருக்கும் எனச் சிந்திக்கக் கூட முடியாது.
கங்கொடவில சோம தேரரின் அண்மைய காலம் முதல் யுத்த வெற்றியின் மமதைவரை உள்ள காலத்தைப் பார்க்கும் போது இந் நவீன பௌத்த யுகத்தில் புத்தரைக் கொலை செய்வதைக் காணலாம். அது குண்டுகளாலோ அல்லது துப்பாக்கி ரவைகளாலோ அல்ல. கடந்த வாரம் லண்டன் நகரில் பிரித்தானியாவின் பிரதான வீதி ஒன்றில் பட்டப்பகலில் ஒரு இராணுவ வீரனை கூரிய கத்தியால் துண்டு துண்டாக வெட்டியது போலாகும். அந்த கொலைகாரர்களிடம் சிறியரக கைத்துப்பாக்கி(பிஸ்டல்) இருந்தது. இருப்பினும் கொலை காரர்கள் இவ்வாறான இலகு ஆயுத்ததைப் பாவிக்கவில்லை. அதிகளவில் இரத்தம் பீரிட்டுப் பாயும் வன் முறையின் உயர் கட்டத்தை அடையக் கூடிய கூறிய ஆயுத்ததையே அவர்கள் பாவித்தனர். புத்தரின் போதனைகளும் அதே விதம்தான் இன்று இலங்கையில் கொலை செய்யப்படுகிறது.
அண்மைகாலமாக இளம் பௌத்த பிக்குகளின் முகங்களைப் பார்க்கும் போது எமக்கு முன்னைய காலத்தில் கண்ட பக்குவப்பட்ட பிக்குகளின் முக சாயலில் ஒரு துளியைக் கூட காணமுடிவதில்லை. நாடு ஒன்றை வெற்றி கொண்ட சண்டாவசோக (அதர்ம அசோகன்) சக்கரவர்த்தி ஒருநாள் அரச மாளிகை முன் காலை நேரம் பாதையில் செல்லும் போது இளம் பிக்குவின் பக்குவத்தில் மயங்கி தர்மாஷோக்கவாக (தர்ம அசோகனாக) மாரிய கதையைக் கேள்விப்பட்டுள்ளோம். கடந்த காலங்களில் சிங்கள ராவய, பொதுபலசேனா மற்றும் ராவணாபலய போன்ற தீவிரவாத அமைப்புக்கள் அடிக்கடி வீதிக்கு கொண்டு வந்த சாமநேரு பிக்குகளுடைய(பிக்கு மாணவர்) முகங்களில் கூட எவரும் எளிதில் அச்சமடையும் பயங்கரவாத சுபாவமே காணப்பட்டது. அதன் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகவேதான் இந்திரரத்ன தேரின் அக்கினிப் பூஜையும் ஒரு திருப்பு முனையாக இருந்தது.
இவர் யார்? சில ஊடகங்கள் தெரிவிக்கும் முறையைப் பார்க்கும் போது இவர்; சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்காக அங்கு மிங்கும் ஒளித்தோடியவராகும். ஒரு காலத்தில் பெல்மடுல்ல பிரதேச சபையின் ஹெல உருமய கட்சியின் அங்கத்தவராக இருந்து ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்டவராகும். முஸ்லிம் பள்ளி ஒன்றை உடைக்கும் போது தனது காவி வஸ்திரத்தை கலற்றி எரிந்து தனது மார்பகத்தை ஒரு சண்டியனாகக் வெளியே காட்டிய புகைப்படம் ஒன்றையும் ஒரு இணையம் வெளியிடிருந்தது. அத்துடன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றைத் தாக்கிய சம்பவத்துடனும் தொடர்பு பட்டுள்ளார். அத்துடன் வீரக்கெட்டிய பொலீஸ் நிலையத்தை தாக்கிய சம்பவத்துடன் தேடப்பட்ட ஒருவர். இவ்வாறு சமயம்இ இனம் என்பவற்றிற்கான வீர சாகசங்களை செய்தததை அடுத்து சமுர்தி உத்தியோகம் பெற்றுத் தருவதாக பண மோசடி செய்து அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவான ஒருவருமாகும். மரணிப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தும்படி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவராகும். அவரை ஒரு பௌத்த பிக்கு என்பதற்கு பதிலாக ஒரு பௌத்த ஆலயத்திற்கு அருகிலாவது கூட்டிச் செல்லக்கூடிய நடத்தைகள் அற்ற அதற்கான அருகதையற்ற ஒருவராகும்.
ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விரட்டப்பட்ட பின்னர் உயிர்கள் வாழ்வதற்காகன ஆரம்ப ஒழுக்க நெறியைக் கூட மீறி தன்னைத் தானே தீயிட்டுக் கொண்ட இவரின் சடலத்திற்கு முன்னால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அரசியல் மயப் படுத்தப்பட்டுள்ளதை நாம் புறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
யுத்த வெற்றிக்கு முன் இருந்த ஜாதிக ஹெல உறுமய விற்கும் யுத்த வெற்றிக்கு பின் உள்ள ஹெல உறுமய விற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை நாம் புறிந்து கொள்வது அவசியமாகும். யுத்தம் முடிவடைவதற்கு முன் இந் நாடும் பௌத்த மதமும் ஹெல உறுமய வின் தனிச் சொத்தாக இருந்தது. ஆனால் இன்று அதற்கு உரிமை கோருபவர்கள் ஆனேகர் உள்ளனர்.
இவ்வாறான போட்டி நிலையில் சிங்கள பௌத்த அரசியலுக்காக பௌத்த மதத்தை மென்மேலும் கலங்கப்படுத்த வேண்டியுள்ளது.
அப்பில் மற்றும் திராட்சை போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது போன்று மாட்டு இறைச்சியையும் ஏன் இறக்குமதி செய்ய முடியாது என்று பொது பல சேனாவின் தலைவர் கலபொடஅத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாடு அறுப்பதை தடை செய்வது தீயிட்டுக் கொண்டு மரணித்தவரின் கோறிக்கைகளின் ஒன்றாகும். ஆனால் தற்போது கலபொடஅத்தே ஞானசார தேரரின் கூற்றுப்படி சிங்கள பௌத்த மாட்டின் இறைச்சிக்குப் பதிலாக மேற்கத்திய கிரிஸ்தவ மாட்டின் இறைச்சியை சாப்பிடுவது பௌத்த மதத்தின் கோட்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காது என்பதாகும்.
இலங்கையிலுள்ள மாடுகளின் உயிருக்குள்ள பெறுமதி வெளிநாட்டிலுள்ள மாடுகளின் உயிருக்கு இல்லை என்ற இந் நிலமை வெறுமனே பௌத்தம் அல்லாத சொல்லால் வர்ணிப்பதுடன் அவர்களது தற்போதைய அரசியல் மூலம் இன் நாட்டுக்கு ஏற்படுகின்ற அழிவை குறை மதிப்பீடு செய்வதாகும். (இப்படியானவர்கள் பௌத்தரல்லாதவர்கள் என்று கூற அவசியமில்லை.)
மீன் சாப்பிட வேண்டாம் என்று இவர்கள் எப்போவாவது கூறவில்லை. நாங்கள் அதனை சற்று தள்ளி வைப்போம். ஆனாலும் பன்றி இறைச்சியையும் சாப்பிட வேண்டாம் என்று இதே விதம் உயர் தொனியில் ஏன் கூறவில்லை? அவ்வாறு கூறினால்; இஸ்லாமியருடன் அண்மித்து விட வேண்டி வரும் என்பதனாலாகும்
மறு புறம் இலங்கையின் மாட்டு இறைச்சியின் ஆதிக்கம் முஸ்லிம்களின் கையிலேயே உள்ளது. வியாபார ரீதியில் நடாத்தப்படும் மாடு அறுப்பதுஇ இறைச்சி வியாபாரம் செய்வது என்பன முஸ்லீம்களது கையிலேயேதான் உள்ளது. இன் நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் எதிர்ப்பின் மூலம் மாடு அறுப்பதை தடை செய்யக் கோறுவது வெருமனே மாடுகள் மேல் உள்ள பாசத்திற்கு அப்பால் சென்று முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகத்திற்கு விடப்படும் சவால்களில்; ஒன்றாகும். வெளிநாடுகளிலிருந்து மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்து உண்பது இவர்களுக்கு பிரச்சினையாக இல்லாதிருப்பது இதனாலேயாகும்.
உயிர்களை காவுகொண்ட யுத்த்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட கூறாத இப் பிக்குகள் தமது உயிரை விட ஒரு மாட்டின் உயிரானது உயர் பெறுமதி கொண்டது என சிந்திப்பதில் எமக்கு பிரச்சினை இல்லை. புத்தரின் தர்மத்தை அனைத்து ஜீவராசிகளிடமிருந்து பறித்து சிங்களவர்களின் தனிச் சொத்தாக அதனை ஆக்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களது சிந்தனைகள் மாறுவது இயற்கைத்துவமானதல்ல.
அதன் விளைவாக முழு நாடும் இக்கட்டான நிலைக்கு உள்ளாகுவதும்இ இனங்களுக்கு இடையே சமனற்ற தன்மை மேலோங்குமானால் உண்மையான பௌத்தர்கள் மொளனமாக இருக்க வேண்டுமா? அரசியலை தமது சிரம்மேற்கொண்டுள்ள பிக்குகள் இவ்வாறு நடந்து கொள்ளும் போது மக்களும் அதற்கு ஏற்றவாறு தாளம் போடுகின்றனர். இம் மனித உயிர்; தீயில் கருகும் விதத்தை 'ஒரு ரியலிடி ஷோ' போன்று கமராவில் பதிய வைத்து தமது தொழிலின் எதிர்காலத்தை மேலோங்கச் செய்து கொள்ள நினைத்த ஊடகவியலாளரும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மனித உயிர் ஒன்றை காப்பாற்றுவதை விட இவ் உயிர் அழிவதை படம் பிடிப்பதுதான் அவருக்கு முக்கிய தேவையாக இருந்தது. அவர் இந்துஇ கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் ஒருவரல்ல. ஒரு சிங்கள பௌத்தராவார்.
உங்களால் ஒரு சிங்களவராகலாம். ஒரு பௌத்தராகலாம். ஆனால் உங்களால் சிங்கள – பௌத்தராக முடியாது. ஏனென்றால கௌதம புத்தர் உங்களை விட்டும் திசை மாறிவிடுவார்.
very very good article
ReplyDeletehe is genuine. he may be from a decent family , i think.
ReplyDeleteExcellent article.. Thank you Mr.Gamini and Hafees
ReplyDeleteபன்றியை கொல்ல கூடாது என்று எவரும் சொல்ல வில்லை. மிருககாட்சி சாலைக்கு ஒரு நாளைக்கு நாற்பது மாடுகள் மிருகங்களின் உணவுக்காக தேவை படுகிறதாம். மாடு அறுக்கா விட்டால் மிருகக்காத்ச் சாலையை மூட வேண்டி ஏற்படுமாம். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தின் உச்சம் என்பதே அனைவரினதும் முடிவு. இந்த கட்டுரை ஆசிரியர் உண்மையான பௌத்தர் என்றே நான் கருதுகின்றேன். நன்றி உங்கள் கருத்திற்கு.
ReplyDeletewonderful article
ReplyDelete