பேஸ்புக்கில் வருபவர்களை எமது நண்பர்கள் என ஏற்றுக்கொள்ளக்கூடாது - ஜனாதிபதி மஹிந்த
இலங்கைக்கே உரித்தான சிறந்த கலாசாரங்களை சீர்குலைக்க சமூக மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும் செயற்படும் சக்திகளிடமிருந்து எச்சரிக்கையாக செயற்படுவது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
களுத்துறை மகளிர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு மாணவிகளின் உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டில் சிறந்த குடும்ப அமைப்புகள் உள்ளன. உலகில் பெருமையையும் தனித்துவத்தையும் அடையாளப் படுத்துவது எமது நாட்டின் குடும்ப உறவுக் கலாசாரமே. 16 வயதாகியவுடன் குடும்பத்தை விட்டுப் பிள்ளைகள் வேறாகப் பிரிந்து செல்லும் கலாசாரம் எமது நாட்டில் இல்லை. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு கருத்துக்கள் உலா வருகின்றன. ஆண்களுக்கு நிகரானவர்களாக பெண்கள் இருக்க வேண்டுமெனவும் ஆண்கள் செயற்படுவது போல் பெண்களும் செயற்பட வேண்டுமென்றும் கூறும் அமைப்பு களும் உண்டு.
பெண்கள் விடுதலை, பெண்கள் உரிமை எனக் கூறிக்கொண்டு பெண்கள் மது அருந்தவும் முடியும் என பிரசாரப் படுத்துவோர் வெளிநாடுகளை அதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்கின்றனர். எமது நாட்டுக்கு ஒரு சிறந்த கலாசாரம் உண்டு. சிறந்த குடும்ப பிணைப்புகள் உண்டு. எமது சிறந்த நண்பர்கள் எமது பெற்றோர்களே. அதைவிடுத்து பேஸ்புக்கில் வருபவர்கள் எமது நண்பர்கள் என ஏற்றுக்கொள்ளக் கூடாது. வளர்ந்து வரும் தலைமுறை இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
சில பாடசாலைகளுக்கும் இத்தகைய கலாசாரத்தை ஊடுருவச் செய்ய சில சக்திகள் முனைகின்றன. இவர்களிடமிருந்து எமது பிள்ளைகள் பாதுகாக்கப்படவேண்டும். சுதந்திரம் என்பது இத்தகைய செயற்பாடுகள். சுதந்திரம் என்பது எமக்கான பொறுப்பின் அடையாளம் என்பதை குறிப்பாக இளந்தலைமுறை மாணவர்கள் உணர வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாழ்க்கைக்கான பொறுப்பல்ல. கைத் தொலைபேசிகள், மடி கணனிகள் காட்டும் கலாசாரத்தை விட்டுவிட்டு ஒழுக்கத்தைப் பாதுகாத்து வாழ்வதில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.
சமூகப் பிரச்சினைகள் பல படிப்பினை எமக்கு உணர்த்துகின்றன. சிறு சிறு பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் நிலையை தற்போது எமது சமூகத்தில் காணப்படுகிறது. பரீட்சையில் தோல்வி என்பதால் தற்கொலை, அம்மாவின் எச்சரிக்கைக்காக தற்கொலை என தற்கொலைகள் தொடர்கின்றன. தவறான வழிகளில் எமது பிள்ளைகள் சிந்திக்க இடமளிக்கக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும் முன்னெடுத்து வருகிறது. உள ரீதியான பாதிப்புகளிலிருந்து எமது பிள்ளைகள் பாதுகாக்கப்படவேண்டும். இதற்கான பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் என சகலருக்கும் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Dear President what you said is very true, we have rich heritage among families and communities but the current trend started by few Racist group like BBS is very dangerious to our Monther Lanka. Please nib in the but.If you wanted to maintain the same heritage.
ReplyDeleteHi Friends,
ReplyDeleteசரியை யார் கூறினாலும் அது சரிதான் அதேபோல தவறை யார் கூறினாலும் அது தவறுதான்.
நமது நாட்டுக்குரிய பாரம்பரிய குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து வருவதைப்பற்றி நமது தலைவர்கள் தமது வேலைப்பளுவுக்கிடையே சிந்தித்து 'கவலை'ப்பட்டிருப்பது மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது.
அதேவேளை, விளைவுகளைப் பற்றிக் கவலை கொண்டிருக்கும் அளவுக்கு அதற்குரிய காரணங்களை அவர்கள் சரியாக அடையாளங்கண்டிருக்கின்றனரா என்று பார்த்தால் அது பெருத்த ஏமாற்றத்தையே தருகின்றது.
இலங்கையில் மட்டுமன்றி அபிவிருத்தியடைந்து வரும் வறியநாடுகள் பலவற்றிலே இறுக்கமான பாரம்பரிய குடும்பக் கட்டமைப்பு தளர்வடைந்து வருவது உண்மையே. அதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
தனிப்பட்ட நபர்கள், 'நான் எனது குடும்பத்தை சீர் குலைக்க வேண்டும்' என்று விரும்பிச் செயற்படுவது ஒரு பொதுவான காரணமாக இருக்க முடியமா கூறுங்கள்?
நிச்சயமாக இருக்கவே முடியாது.
மாறாக, அந்தக் குடும்பத்தினரின் வாழ்வியல் முறைமையும் தமது வருவாயைப்பெற்றுக்கொள்ளும் விதமும்தான் காரணமாக அமைய முடியும்.
இன்றுள்ள விலைவாசியும் வாழ்க்கைச் செலவும் குடும்பத்திலே போதாமைகளை ஏற்படுத்தும்போது அவற்றை மீள்நிரப்புவதற்கு பெண்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மேலதிக முயற்சிகளிலே ஈடுபட வேண்டியிருக்கும். சகஜ நிலைமை மாற்றமடையும். இதனால் குடும்பத்தின் பத்திரமான நிலைமைகளிலே தடுமாற்றங்கள் ஏற்படும்.
சில புதிய நபர்களையும் புதிய பழக்கவழக்கங்களையும் விரும்பியோ விரும்பாமலோ அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆக மொத்தம் குடும்பச் சமநிலை தளம்பலடைந்து, அதுவரை இருந்து வந்த கலாசார பாரம்பரியக் குணாம்சங்கள் படிப்படியாக மறைந்து புதியபோக்குகளுக்கு அடிமையாகிவிட்ட குடும்ப உறுப்பினர்களே காணப்படுவர். இதனால் குடும்ப கட்டமைப்புகள் சீர்குலையவே செய்யும்.
நமது நாட்டில் பின்பற்றப்படும் திறந்த பொருளாதாரக்கொள்கை காரணமாக தோன்றியுள்ள அவசியமற்ற பண்டங்களின் பெருக்கமும் அவற்றை நுகர்வதற்கான போட்டி மனப்பான்மையும் நமது கலாசார பாரம்பரியங்களை வேரோடு அழித்து ஒழித்து வருகின்றன.
உள்ளுர் உற்பத்திகள் ஒருபுறம் சமாதியடைந்து கொண்டிருக்க பல்குத்தும் குச்சியிலிருந்து பாதுகாப்புப்படை விமானங்கள் வரை நாம் இறக்குமதி செய்து கொண்டேயிருக்கின்றோம்.
ஆரம்பத்திலே 'உள்ளே வரலாமா ஐயா?' என்று நம்மிடம் அனுமதி கேட்டு பவ்வியமாக நுழைந்த பல்தேசியக்கம்பனிகள் இன்று, ' ஏய் இப்படி வந்து உட்கார்!' என்று அதட்டுமளவுக்கு நமக்கு எஜமானர்களாகிவிட்டன. நாளும் பொழுதும் நடுத்தர மற்றும் வறிய மக்களைச் சுரண்டி நமது பொருளாதார பலத்தை திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு கடைக்கு உரிமையாளனாக இருந்தவனைக் கடன்காரனாக்கி, அவன் கடையை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அதில் அவனையே வேலையாளாக வைத்திருப்பதைப்போல பல்தேசியக் கம்பனிகள் இன்று நமது அரசாங்கத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றன.
இன்னும் சரியாகச் சொன்னால், வெளியே பார்ப்பதற்கு தோரணையாக இருந்தாலும் சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சவுக்கு வீச்சுக்கு ஆடும் சிங்கம் போலத்தான் இருக்கின்றார்கள் நமது 'சக்தி வாய்ந்த' தலைவர்கள். ஆடும் நேரம் தவிர, ரிங் மாஸ்டர் தூங்கும் நேரத்தில் அவ்வப்போது இப்படியான கவலைகளை வெளியிட்டு விட்டு மீண்டும் அடுத்த காட்சிக்குத் தயாராகிவிடுவார்கள்.
இப்போது புரிகின்றதா வாசகர்களே நமது மக்களின் குடும்ப பாரம்பரியங்கள் அழிவதற்கு யாரெல்லாம் காரணம் என்று.
இதுபோன்ற கட்டுரைகளைப்பார்ப்பதற்கு நேரமில்லை காரணம் ஜனாதி மக்களுடன் நீதியாக நடந்துகொள்ளவில்லை என்பதுவும் பேசுவது ஒன்று நடந்துகொள்ளவது வேறுவிதம், ஆகவே நாட்டில் எவ்வளவோ நடக்கின்றது அதெல்லாம் விட்டுட்டு base bukku ரொம்ப அவசியம்தான்..
ReplyDelete