பலாகல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஹபாயா அணியத்தடை..!
(இ. அம்மார் + எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்)
அநுராதபுர மாவட்டத்தல் பலாகல பிரதேச செயலாளர் அலுவலகதில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் எதிர்வரும் 01.06.2013 மிகதி முதல் காரியாலய தினமான திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் ஹபாயா அணியக்கூடாது என பலாகல பிரேதேச செயலாளர் கே. பீ. எஸ். பீ. கழுவாராச்சி கட்டளையிட்டுள்ளார்.
அப்பிரேதச சபையில் 9 பெண் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் பணி புரிவதாகவும் அவர்களில் இருவர் மௌலவியாக்களுமாவர். இவர்கள் இருவருக்கும் குறித்த தினத்தில் காரியாலயத்தினத்தில் ஹபாயா அணிய முடியுமெனவும் ஏனையவர்கள் சாரி அணிந்து வரவேண்டும் எனவும் எழுத்து மூலம் தெறிவித்துள்ளார்.
கடந்த வெசாக் தினத்தன்று குறித்த பிரதேச செயலகத்தில் நடைப்பெற்ற மத அணுஷ்டான நிகழ்வூகளில் குறித்த முஸ்லிம் பெண்கள் பங்குபெற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்தே இவர் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்
கண்டவன் நிண்டவன் எல்லாம் இப்போ இலங்கையில் சட்டம் பேசுகின்றான்கள்,கட்டளை இடுகின்றனர்.யார் யார் என்ன தீர்ப்பு சொல்லுவது என்பதே விவஸ்தை இல்லாது போய்விட்டது?.தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போலாகி விட்டது. யாருமே வாய் திறந்து பேசுவாரில்லையே?.என்று தீரும் இந்த பிரச்சினை.
ReplyDelete