அரச குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் சேர்க்கப்படாத போதும் தனியாக சேர்க்கப்படும்
13வது திருத்தம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று லங்கா சமசமாஜ கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் சிரேஷ்ட அமைச்சர்களான டி.யு. குணசேகர, திஸ்ஸவிதாரண, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர மற்றும் ராஜாகொல்லுரே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியதாவது,
அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறாக இருக்க 13 வது திருத்தத்தை அகற்றுவதே அரசின் நிலைப்பாடு என்று காண்பிக்க சிலர் முயல்கின்றனர். தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டியது த.தே.கூ. பொறுப்பாகும். அவர்களை இதில் பங்கேற்க வைக்க முயற்சி செய்வோம். தெரிவுக்குழுக்களான அரச குழுவில் மு.கா. சேர்க்கப்படாத போதும் தனியாக சேர்க்கப்படும் என்றார்.
Post a Comment