Header Ads



'அரசாங்கத்தை விட்டு வெளியேற ரவூப் ஹக்­கீமுக்கு முது­கெ­லும்­பில்லை'

13 ஆவது திருத்­தத்தை எதிர்க்கும் அமைச்­சர்­க­ளான விமல் வீர­வன்ச, சம்­பிக்க ரண­வக்க பத­வி­களை தூக்­கி­யெ­றிந்து வெளியே வர­வேண்டும். அதே­போன்று அமைச்சர் ஹக்­கீமும் வெளி­யேற வேண்டும். ஆனால் இதனை செய்­வ­தற்கு இவர்­க­ளுக்கு முது­கெ­லும்­பில்லை. வெறு­மனே மக்­களை ஏமாற்­று­கின்­றனர்  என ஐ.தே.கட்­சியின் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரி­வித்தார்.,

2009 இல் யுத்தம் முடிந்த பின்னர் இலங்­கைக்கு விஜ­யத்தை மேற்­கொண்ட ஐ.நா.செய­லாளர் நாயகம் பான்கீ மூனுடன் இணைந்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கையில், 13 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­டு­மென தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது., அதன் பின்னர் ஜனா­தி­பதி, வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்­தி­யா­விற்கு விஜயம் செய்து இதனை வலி­யு­றுத்­தி­ய­தோடு ஐ.நா.மனித உரிமை மாநாட்­டிலும் 13 பிளஸ் தீர்வை வழங்­குவோம் என்றும் அர­சாங்கம் உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யது என்று அவர் தெரிவித்தார். 

ஆனால் எதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லை­யி­லேயே அர­சுக்­குள்­ளி­ருக்கும் பங்­காளிக் கட்­சி­க­ளான ஜாதிக ஹெல உறு­ம­யவின் சம்­பிக்­க­ர­ண­வக்க தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் விமல் வீர­வன்ச உட்­பட பல சிங்­கள பெளத்த அமைப்­புக்கள் 13 க்கு எதிர்ப்பை காட்டி வரு­கின்­றன., மறு­புறம் ராஜித உட்­பட இட­து­சா­ரிகள் ஆத­ரவு தெரி­விக்­கின்­றனர்.

13 ஆவது திருத்­தத்தை எதிர்க்கும் அமைச்­சர்­க­ளான விமல் வீர­வன்ச, சம்­பிக்க ரண­வக்க பத­வி­களை தூக்­கி­யெ­றிந்து வெளியே வர­வேண்டும். அதே­போன்று அமைச்சர் ஹக்­கீமும் வெளி­யேற வேண்டும். ஆனால் இதனை செய்­வ­தற்கு இவர்­க­ளுக்கு முது­கெ­லும்­பில்லை. வெறு­மனே மக்­களை ஏமாற்­று­கின்­றனர் என்று அவர் தெரிவித்தார். 

சிங்­கள பெளத்த மக்­க­ளி­டையே இன­வாதம் மத­வா­தத்தை தூண்­டி­விட்டு அர­சியல் குளிர்­காய முனை­கின்­றனர்., அத்­தோடு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சித் தலை­மை­யி­லான அர­சாங்கம் 13 ஆவது திருத்தம் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை வெளி­யிட வேண்டும். அதை விடுத்து அமைச்­சர்­களை பயன்­ப­டுத்தி நாட­கங்­களை அரங்­கேற்­ற­லா­காது எனவும் குறிப்பிட்டார். 

தெரி­வுக்­குழு, இப்பி­ரச்­சி­னையை ஆராய பாராளுமன்றத் தெரிவுக்­குழு அமைக்கப்பட்­டு  உள்­ளது. இதனால் எவ்­வி­த­மான தீர்வும் கிடைக்­காது. காலத்தைக் கடத்­து­ வ­தற்­கா­கவே தெரி­வுக்­குழு அமைக்­கப்­பட்­டு உள்­ளது.  8 மாகா­ணங்கள்,

8 மாகா­ணங்­களில் மாகாண சபைகள் இயங்­கு­கின்­றன. அப்­ப­டி­யானால் ஏன் வடக்­கிற்கு அதனை வழங்­கு­வதை எதிர்க்­கின்­றனர் என்று அவர் தெரிவித்தார். 


5 comments:

  1. முதலில் உங்கள் தலைவருக்கு முதுகெலும்பு உள்ளதா என தடவிப்பாருங்கள். உங்களை பிடித்த சனியன் எங்களையும் இந்தப்பாடு படுத்துது . இன்னமும்தான் உங்களுக்கு புத்திவரவில்லை .

    ReplyDelete
  2. kiriyella saar!
    engal thalaivarai paartha arasaipaarthu veliyeru enkireehal? neerinry meen vaaluma saar? thalaivarathu thooranokkum, saanakkiyamum, ......mum,......mum.......mum theriyatha pachcha mannaha irukkireere saar.

    ReplyDelete
  3. முதுகெலும்பா..? ஆண்மையா..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. உங்கட தலைவர் மஹிந்த மாமாவின் அன்னகை

    ReplyDelete
  5. இவருடைய கருத்தின் நிலைப்பாட்டை பார்த்தீர்களா? சம்பிக்க, விமல் இரண்டுபேருமே 13 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றவேண்டுமென்று சொலின்றார்கள், றவூப் ஹக்கிம் அதில் ஏதும் மாற்றம் தேவையில்லை என்று சொல்கின்றாராம் ஆக இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு இல்லையாம் இரண்டு தரப்பினரையும் அரசாங்கத்தைவிட்டு வெளியேறவேண்டுமாம்.

    நாங்க சொல்றம் முடிந்தால் கேளுங்க சார் ஐக்கிய தேசிய கட்சி முதுகெலும்பில்லாத கட்சி பொண்ணையர்கள்தான் அதில் இருக்கின்றார்கள் அவர்களால் வெல்ல முடயாது பேசத்தான் முடியும் ஒரு புல்லும் புடுங்க முடியாது என்று பேசுகின்றார்களே இதை பொய்யென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.