காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நோய் நிவாரண நிதி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பாரிய நோய் நிவாரண நிதியில் இருந்து ஆறு நபர்களுக்கு அவர்களின் வைத்திய செலவுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் ரீ.எம்.காலித் ஜேபி தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தில் வாராந்தம் இடம்பெறும் ஜும்ஆ தொழுகைக்கு வருபவர்கள் இவ்வாறான நோய்களுக்காக நிதி பங்களிப்பு செய்து வருகின்றனர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடிப் பகுதிகளில் நோய்வாய்ப்படும் மக்களது நோய் நிவாரணத்திற்காக அவர்களால் முடியுமான நிதிப் பங்களிப்பை பாரிய சம்மேளன நோய் நிவாரணக் குழுவினூடாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறைந்த பட்சம் 5 வேலையும் அல்லாஹ்வை தொளுபவர்களுக்கும்,
ReplyDeleteஇஸ்லாமிய சட்டதிட்டத்தின் அமைப்பில் இருப்பவர்களுக்கும் மாதிரமே
உங்கள் பணத்தை செலவிட வேண்டும் .