Header Ads



இலங்கைக்காக கத்தார் தூதுவருடன் பிரதமர் ஜயரட்ணா சந்திப்பு


(J.M.Hafeez)

கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை போர்த்துக்கேயர் வேறு பகுதிகளுக்கு விரட்டியபோது மலைநாட்டுத் தமிழர்கள்தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். பண்டைய காலத்தில் இருந்தே அரேபியர் வர்த்தகத்திற்காக இலங்கைக்கு வந்தள்ளதுடன் இங்கு குடியேறியுமுள்ளனர் என்று பிரதமர் கலாநிதி தி.மு.ஜயரத்ன அவர்கள் தெரிவித்தார். 

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான விசும்பாயவில் சந்தித்து உரையாடிய போதே இலங்கைக்கான கட்டார் இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு சயீட் அப்துல்லா அல் மன்சூரி அவர்களை சந்தித்த போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.  

இங்கு பிரதமர் தி.மு.ஜயரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

பயங்கரவாதிகள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுபவர்கள் அன்று எல்.ரீ.ரீ.ஈ யினர் மேற்கொண்ட படுகொலைகளை மறந்து விட்டனர். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 24 மணித்தியாலங்களுக்குள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் மூவின மக்களும் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டனர். சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே குழப்பத்தினை விளைவிப்பதற்கு சிலர் முனைந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச ரீதியிலான சூழ்ச்சிகள் காணப்படுவதாக தாம் சந்தேகப்படுவதாகவும் இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் எனவும் கூறினார். 

அன்றைய அரசர்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கும் உதவி வழங்கியிருக்கின்றார்கள். போர்த்துக்கேயர் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை விரட்டிய போது மலைநாட்டுத் தமிழர்கள்தான்; முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். பண்டைய காலத்தில் இருந்தே அரேபியர் வர்த்தகத்திற்காக இலங்கைக்கு வந்தள்ளதுடன் இங்கு குடியேறியுமுள்ளனர். எனவே, இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே முஸ்லிம்கள் இங்கு குடியேறி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. மலைநாட்டு முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்கள் பட்டம் பதவிகள் வழங்கி கௌரவித்துமுள்ளனர்.

சேவைக் காலம் முடிவடைந்து மீண்டும் தாய்நாட்டுக்குச் சென்றாலும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக  அந்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பினைப் பெற்றுத் தருமாறு இங்கு தூதுவர் அவர்களிடம் பிரதம அமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். 

இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்துக்கும் இடையே இதுவரை 15 இராஜதந்திர ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதனூடாக இலங்கைக்கு பொருளாதார ரீதியாக சாதகமான நிலைமை ஏற்பட்டள்ளதாகவும் இலங்கைக்கான கட்டார் இராச்சியத்தின் தூதுவர்  சயீட் அப்துல்லா அல் மன்சூரி அவர்கள் கூறினார். மத்திய கிழக்கில் கட்டார் இராச்சியமானது துரித பொருளாதார அபிவிருத்தியை அடைந்துள்ள நாடாகும். அதனூடாக இலங்கையும் பல நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

தனது 05 வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்ததன் பின்னர் தாய் நாடு நோக்கிப் புறப்படுவதற்கு முன்னர் இரு தரப்பு உறவுகளையும் மேலும் விருத்தி செய்யும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம் பெற்றது. அதில் தூதுவா மேலும் தெரிவிதததாவது,

மத்திய கிழக்கு முஸ்லிம்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதன் காரணமாக அங்கும் அரசியல் ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் அந்நாடுகளின் எண்ணெய் வளம் காரணமாக அவை பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டிருப்பதனால் அது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லையெனவும் கூறினார்.

இலங்கை மக்கள் விருந்துபசரணை விடயத்தில் மிகச் சிறந்தவர்கள் எனவும் அவர்களது எண்ணங்கள் நவீன உலகத்துடன் இயைந்து செல்வதாகவும் அவர் கூறினார். யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்கின்றார். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ரீதியிலான இடைவெளியைக் குறைக்குமுகமாக பல ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் நிமித்தம் கட்டார் இராச்சியத்தின் தலைவர்(நுஅசை) விரைவில் இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். கட்டார் இராச்சியம் இலங்கையின் நெருங்கிய நண்பனாக இருப்பதுடன் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அழுத்தங்கள் ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது நாடு முன்வரும் எனவும் கூறினா.




No comments

Powered by Blogger.