மண்டியிட்ட ஆசிரியைக்கு இடமாற்றம்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவினால், நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியை முழந்தாள் இட வைக்கப்பட்டது தொடர்பான சாட்சிகளை மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கல்வி சார் உத்தியோகத்தர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 17ஆம் திகதி புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் குறித்த பாடசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் கண்ட பிரதி அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிரி இதனை தெரிவித்தார்.
குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் காமினி பண்டாரவிடம் sfm வினவியது. அந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பாடசாலையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கிலேயே அங்கு சென்றதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்டு பாதிப்படைந்த ஆசிரியை கருத்து தெரிவிக்கையில், தான் முழந்தாழ் இடப்பட வைக்கபட்ட சம்பவத்தை அடுத்து, ஆனமடுவ ரத்தினபால வித்தியாலயத்திற்கு மாறுதல் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
தனது இந்த கோரிக்கை கல்வி அதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், தமக்கு மாறுதலாக வழங்கப்பட்ட பாடசாலை, தன்னை துன்புறுத்திய மாகாண சபை உறுப்பினரின் இல்லத்திற்கு அருகாமையில் இருப்பது தமக்கு புதிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தற்போதைகய பிரச்சனையை விளங்கப்படுத்தி கலகமுவ யூ.பி. வன்னிநாயக்க தேசிய பாடசாலைக்கு மாற்றம் தரும்படி வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, அவரது கோரிக்கைக்கமை இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசிரியை தண்டிக்கப்பட்ட விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாத்தாண்டிய பிரதேச பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கல்வி அறிவற்றவர்களுக்கு வேட்பு வழங்கப்படக் கூடாது எனவும் கோரிக்கை ஆர்ப்பாட்டக் காரர்களினால் விடுக்கப்பட்டது.
மனித நேயம் எங்கே? பரிதாபம். தனது கடமையை முறையாக நிறைவேற்றிய, ஒழுக்கத்தை நடை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்திய ஓர் ஆசிரியையின் நிலை????
ReplyDeletepolitic power plays in the country very badly.
ReplyDeleteit is dancing allover the island in such unity of community, religion, business, property even in the education and on teachers who brought them up in the society.
THIS IS THE CURRENT POLITICAL SIMILAR TO CINEMA SHOW.