மூதூரில் பேருந்து நிலையம் திறந்துவைப்பு
மொஹமட் நளீஜ்)
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதூர்
பேரூந்து நிலையம் நேற்று சனிகிழமை திறந்துவைக்கப்பட்டது. இக்கட்டிடத்தினை கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக ஆகியோர் திறந்துவைத்தனர். இந்நிகழ்வில் கிழக்குமாகான சபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய பேரூந்து நிலையத்துடன் இணைந்து பொதுமக்கள் ஓய்வு அறை ஒன்றினையும் அமைப்பதுடன். சுற்றுப்புற வீதிகள் அனைத்தையும் செப்பணிடும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Post a Comment