என்னை கொலை செய்ய சதிதிட்டம் - இம்ரான்கான்
தேர்தல் பிரசாரத்தின் போதே என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டது என முன்னாள் கிரிக்கெட்வீரர் இம்ரான்கான் கூறினார். பாகிஸ்தானில் கடந்த மே 11-ல் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் தக்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் அக்கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிட்டார். கடந்த மே 7-ல் லாகூரில் பிரசாரம் செய்த போது மேடை சரிந்து விழுநது காயமடைந்தார். இந்நிலையில் தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், தேர்தலுக்கு முன்பாகவே என்னை கொலை செய்ய சதி திட்டம் நடந்தது. லாகூரில் ஜி.டி.சாலையில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் இந்தசதிதிட்டத்தை நிறைவேற்ற முயன்றனர். இதனை முன்கூட்டியே நான்அப்போதைய அரசிடம் தெரிவித்ததால் தப்பித்துவிட்டேன் என்றார்.
Post a Comment