Header Ads



பள்ளிவாசலில் பாசிசப் புலிகள் தாக்குதல் - தடயங்கள தவிர்ந்த ஏனைய பகுதிகள் புனர்நிர்மாணம்

 
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிகள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் கடந்த 03-081990- வெள்ளிக்கிழமை அன்று இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாசிஸ்ப புலிகளினால் கொடுரமாக கொள்ளபட்ட சம்பவம் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மறக்க முடியாத துக்க சம்பவமாக பதிந்துள்ளது.

புலிகளினால் கொடுரமாக தாக்குதல் நடாத்தப்பட்ட தடயங்கள் இதுவரையில் புனரமைக்கப்பட்டாமல் இருக்கின்ற நிலையில் அதை பார்ப்பதற்கு இன்னும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அன்னிய மதத்தவர்களும் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்து அத்தாட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

தற்போது குறித்த காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு வருவது தொடர்பில் எமது செய்தியாளர் அப்பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் சுபைர் ஸி.ஸி.யை தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்கு கருத்து தெரிவித்த பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் ஒரு போது புனர் நிர்மானம் செய்யப்படாதென்றும் ,அதைத் தவிர ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.



 

 

3 comments:

  1. செய்தியில் பள்ளிவாசல் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த சுபைர் ஸி.ஸி என்பவர் ஜமாஅத்தார்களால் ஜனநாயகரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபைத் தலைவர் அல்ல. இவர் ஏற்கனவே தலைவராக இருந்து காத்தான்குடி நகர சபைத் தேர்தலின்போது ஆளுந்தரப்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அணியில் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தவர்.

    தேர்தலில் ஆகக் குறைந்த வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு மக்களால் பகிரங்கமாக நிராகரிக்கப்பட்டவர். இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் அதிகாரத்தின் மூலமே இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டு இப்பள்ளிவாசலின் இருப்பாகவுள்ள பல மில்லியன் ரூபாய்களை எவ்வழியிலாவது செலவு செய்து தீர்க்க வேண்டுமென்ற நோக்கில் இந்த அபிவிருத்தியை இப்போது மேற்கொண்டு வருகின்றார்.

    விடுதலைப் புலிகள் 1990ல் செய்த படுகொலைகளை விடவும், இப்படிப்பட்ட பதவி ஆசை கொண்ட மனிதர்கள் அரசியல்வாதிகளின் சால்வைகளில் தொங்கிக் கொண்டு இப்பள்ளிவாசலின் நிர்வாகிகள் என ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகளுக்கு அதிக வேதனை தருவதாகும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Masahallah that great news this mosque going to re construction again and my opinion no need to keep past violence memories.Who died those incidence insha allah all achive shaheed awards in jannah.May allah forgive all those brothers sins!

    ReplyDelete
  3. ரஹ்மதுழ்ழாஹ்!

    என்னசெய்வது இறுதி நாளின் அடையாளங்கள் உண்மையானவையல்லவா? ஆகவே இதுபோன்ற தலைவர்களின் தோற்றம் வேதனை தருகின்றது ஆனால் முஸ்லிம்களுக்கு ஆச்சரியம் தராது, இவர்கள்தான் இறைவனாலும் எம்பெருமானார் ரஸுலுல்லாஹ் ஸ்ல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சொன்ன தலைவர்கள், ஏற்கனவே இவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன, இதுபோன்ற காரியங்களுக்காகவே இவர்கள் தலைவர்களாக இருக்கவேண்டுமென்று அமர்கின்றார்கள் அமர்த்தப்படுகின்றார்கள்.. இவர்களைத்தான் அடிக்கடி அல் குர் ஆனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இவைகளைக்கொண்டு இவர்கள் பயப்படாதவாறும் புரிந்துகொள்ளாதவாறும் இறைவன் தடுத்துள்ளான் அல்லாஹ் சொல்லவில்லையா? தான் நாடியவர்களுக்கு நேர்வழியைக்காட்டுகின்றேன் என்று இவர்கள் வழிதவறியவர்கள் கூட்டத்திலுள்ளவர்கள்....

    ReplyDelete

Powered by Blogger.