வடமாகாண தேர்தலின் பின் அங்குள்ள முஸ்லிம்களை விரட்டியடிக்க திட்டம் - விமல் வீரவன்ச
(Adt) காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெற்ற கையெழுத்து ஆவணங்கள் இன்று (12) தேசிய சுதந்திர முன்னணி தலைவர், அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கையளிக்கப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வு கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதில் நாட்டில் பல பாகங்களிலும் இருந்து வந்த தேசிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் தாம் பெற்ற கையெழுத்து ஆவணத்தை அமைச்சரிடம் கையளித்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச,
"வடக்கு மாகாண சபைத் தேர்தல் செப்டம்பரில் நடத்தப்பட வேண்டுமானால் 13ம் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும் என நாம் வரலாற்றில் முதல் முறையாக கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
இதனை வலியுறுத்திம் வகையில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நாடு முழுவதும் பொதுசன மனுவில் கையெழுத்து பெற்றோம். ஐதேக, ஜேவிபி, ஐமசுமு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தலைவர்கள் ஆதரவில் 10 லட்சத்திற்கு அதிகமான கையெழுத்து பெறப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதிக்கு இந்த மனுவை கையளித்து 10 லட்சம் மக்களின் எண்ணத்தை அவர் முன்னிலையில் தெரிவிக்க உள்ளோம்.
அரசாங்கம் இன்று செய்ய எண்ணியுள்ள இரண்டு திருத்தங்கள் மட்டும் போதுமானது என நாம் கருதவில்லை. ஆனால் அந்த திருத்தத்தையும் செய்யவிடாது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அரசிற்குள் உள்ள பழைய இடதுசாரி கட்சி எதிப்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலமடைந்தது. ஆனால் இதன்மூலம் கிழக்கு முஸ்லிம்கள் புறந்தள்ளப்பட்டனர். அதனால் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக அன்று முஸ்லிம் காங்கிரஸ் நிறுவுனர் அஷ்ரப் இருந்தார். அப்படிப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை லாபத்திற்கு கையில் எடுத்த ஹக்கீம், அஷ்ரப்பின் கொள்கைகளுக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் திட்டத்திற்கு அமைய முஸ்லிம் காங்கிரஸை ஆட்டிவைக்க ஆரம்பித்துள்ளார்.
தேர்தலின் பின் மாகாண சபையில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள சிங்கள, முஸ்லிம் மக்களை விரட்டியடிக்கும் திட்டம் செயற்படுத்தப்படும். இவ்வாறான நிலை ஏற்பட வேண்டுமா? வடக்கு தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வென்றால் மத்திய அரசுடன் மோதி சர்வதேசத்திற்கு முறையிட்டு தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பர்.
13ம் திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக மக்கள் வாக்கெடுப்பு நடாத்தி மக்கள் கருத்துபடி செயற்படுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை முன்வைக்கிறோம். அப்படி செய்தாவது நாட்டை மீட்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றினார்.
விமல் வீரவன்ச இன்னும் சின்னப் புள்ள விளையாட்டு விளையாடுறாறு. கையெழுத்து வைப்பது பெரிய வேலையா?ஒருவருக்கே 1000 கையெழுத்து ஒவ்வொரு விதமாகப் போட்டுவிடலாமே. யார் யாருடையதென்று யார் பரீட்சித்துப் பார்ப்பது. இதெல்லாம் பழைய நாடகம். புதிய நாடகம் ஒன்றை கொண்டுவாருங்க சேர்.
ReplyDeleteஐ...!
ReplyDeleteஎங்களுக்கேவா விமல்? நாங்கெல்லாம் பேய்க்கே பேன் பாத்தவங்க தெரியுமா?