பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு விஹாரையில் கொள்ளை
பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு விஹாரையிலிருந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று கெப்பத்திக்கொல்லாவையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கெப்பத்திக்கொல்லாவா, ஹேரத் ஹில்மிலேவ விஹாரையிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இன்று அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விஹாரைக்குள் புகுந்த கொள்ளை கோஷ்டியினர் விஹாராதிபதி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர். TM
என்னென்னெவெல்லாம் நடக்கின்றது இந்த சின்னொரு அழகான நாட்டில், புலிகள் இருந்த காலத்திலும் இதுபோன்ற பிரச்சினைகள் நடக்கவில்லை, அரசாங்கம் புலிகளை அழித்து நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் சுதந்திரந்த்தைப்பெற்றுத்தந்த லட்சணம்தான் இது கட்டிகொண்டிருக்கும் கோவணத்துக்குக்கூட உத்தரவாதமில்லையப்பா யார் எப்போது புடுங்கிட்டு ஓடுவானுங்க எண்டே தெரியல்ல...
ReplyDelete