கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு..!
(ஏ.எல்.ஜுனைதீன் )
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாய விஸ்தரிப்பு நிலையத்திற்குப் பின்னால் உள்ள வயல் பாதையிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் மிருகங்களினதும் பறவைகளினதும் கழிவுகள் நாளாந்தம் கொட்டப்படுவதால் இங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றாடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சந்தைகளில் விற்கப்படும் கோழிகள் மாடுகள் என்பனவற்றின் கழிவுகள் இப்பாதையோரத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன. கட்டாக்காலி நாய்கள் கழிவுகளைக் கிளறிவிடுவதுடன் மாடுகளின் எலும்புகளை கெளவிக்கொண்டு பல இடங்களிலும் போடுகின்றன. காகங்கள் கோழிகளின் குடல்கள் என்பனவற்றைக் கொத்திச் சென்று மக்கள் குடியிருப்பு பிரதேசங்களிலும் கிணறுகளுக்கும் போடுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகர சபை சுகாதார அதிகாரிகள் மற்றும் இப்பிரதேச பொதுச் சௌக்கிய பரிசோதகர்கள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment