Header Ads



குவைத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி (படங்கள்)


TNTJ குவைத் மண்டலம் சார்பாக  கடந்த 31-5-2013 வெள்ளிக்கிழமை அன்று மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக உலக அளவில் இரண்டாவது முறையாக சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புத்த மத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள SLTJ யின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான முறையில் பதிலலித்தார்.

ஹலால் பிரச்சினை ஏன்?
முஸ்லிம்கள் ஏன் தாடி வைக்கிறார்கள்?
ஹிஜாப் பெண்ணடிமைத் தனமில்லையா?
கஃபத்துல்லாஹ் புத்த கோயில் தானே?
பொதுபல சேனாவின் நோக்கம் தான் என்ன?
மாற்று மதத்தவர்களை மக்காவில் நுழைய ஏன் அனுமதிப்பதில்லை?
நபிகளாரின் பலதார மனம்,
மற்றும் முஸ்லி ஆண்களுக்கு ஏன் நான்கு திருமண அனுமதி?
போன்ற இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கிய கேள்விகள் கேட்க்கப்பட்டது.

இது போன்ற நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துங்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர்.

நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பதிலும், வந்தவர்களை முஸ்லிம்கள் உபசரித்த விதமும் எங்களுக்கு இஸ்லாமியர்கள் மீது நன் மதிப்பை உயர்த்தியுள்ளது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் கூறியது மனதை நெகிழச் செய்தது.

அரங்கத்தில் இலவசமாக நூறு பேறுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, பலதார மனம் ஏன்?, இஸ்லாத்தில் இல்லறம், யார் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள்? ஆகிய நூல்களும் “யார் இந்த பொதுபல சேனா?” என்ற DVD யும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


1 comment:

  1. Alhamdhulillah.....

    This is one of the most advanced and educated way to show non-Muslims brothers & sisters what is actual / pure Islam.

    Brother Abdur Razik (The General Secretary of SLTJ) who answered/conducted above is a brilliant and splendid speaker in Sinhala.

    Such programs (in Tamil, Sinhala) were properly handled only by TNTJ and SLTJ presently in the world and hope to continue every where with the help of Almighty Allah.

    May Allah bless all of you!


    ReplyDelete

Powered by Blogger.