Header Ads



பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்திய அரசியல்வாதி விடுதலை

(Ad) பாடசாலை ஆசிரியை ஒருவரை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

நவகத்தேகம பாடசாலை ஆசிரியை ஒருவரை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார கைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

பாடசாலை மாணவிகள் சிலரது குட்டையான சீருடைய தொடர்பில் ஆசிரியை அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். 

இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் மாகாண சபை உறுப்பினரது மகள் எனவும் அம்மாணவி தந்தையிடம் முறைப்பாடு செய்ததைத் தெடர்ந்து அவர் ஆசிரியையை தண்டித்தார். 

இதனை தொடர்ந்து ஆசிரியை நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தார். 

இவ் முறைப்பாட்டிற்கு அமைய மாகாண சபை உறுப்பினர் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாகாண சபை உறுப்பினர் இன்று (27) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

2 comments:

  1. KAITHUKAL YAAVUM VERUM KAN THUDAIPPE.

    ReplyDelete
  2. பாவம் அந்த ஆசிரியை இனி அவர் அந்த ஊரிலேயே வாழ முடியாது நிம்மதியாக பாடசாலைக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி புகட்ட முடியாத சூழ்நிலைதான் ஏற்படும் இன்று மாலை அந்த அரசியல்வாதி ஒரு தொலைக்காட்சியில் மிகவும் கடும் தொனியில் கொட்டித்தீர்த்தார், இலங்கை ஆசிரியர் சங்கம் எடுக்கப்போகும் காத்திரமான நடவடிக்கையில்தான் அந்த ஆசிரியையின் வாழ்கையே தங்கி உள்ளது பொறுத்திருந்து பாப்போம்?

    ReplyDelete

Powered by Blogger.