துனிசியாவில் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
துனிசியா நாட்டில் வசிக்கும் பெண் ஆர்வலரான அமீனா டைலர் என்பவர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, மதம், சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம், என்னுடைய உடல் எனக்குச் சொந்தம் என்ற கருத்தை வலியுறுத்தி மேலாடையின்றி தனது புகைப்படங்களை இவர் இணையதளத்தில் வெளியிட்டார்.
இது அந்நாட்டு அரசியல் தலைவர்களை கோபமுறச் செய்தது. மேலும், கடந்த மே மாதத்தில் கைரோயுவான் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் மத சம்பந்தமான மையத்தின் சுவற்றில் பெண்ணியம் என்ற வார்த்தையை அடிக்கடி எழுதியதால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக, இரண்டு பிரெஞ்சு நாட்டுப் பெண்களும், ஒரு ஜெர்மானியப் பெண்ணும் கடந்த மே மாதம் 28ஆம் தேதி பொது இடத்தில் மேலாடையின்றி தோன்றி தங்களின் எதிர்ப்பைக் காண்பித்தனர். தங்கள் நடவடிக்கையில் எந்தத் தவறுமில்லை என்று இவர்கள் கூறியபோதிலும், முதன் முறையாக நடைபெற்ற இத்தகைய சம்பவம் அரபு நாட்டினரை அதிர்ச்சியுறச் செய்தது..
இம்மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு நான்கு மாதம், ஒரு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாலின் ஹில்லியர், மார்கரெட் ஸ்டெர்ன், ஜோசபின் மார்க்மன் ஆகிய இம்மூவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தான் செய்த காரியம் அந்நாட்டு மக்களை இந்த அளவிற்கு அதிர்ச்சியுறச் செய்யும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று ஹில்லியர் கூறினார்.
மறுமுறை தான் இத்தகைய செயலைச் செய்ய மாட்டேன் என்றும், தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும், இவர்கள் போராடுவதற்குக் காரணமாக இருந்த அமினா டைலர் இன்னும் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
பெண்களுக்கு பைத்தியம் முத்திவிட்டது இல்லையானால் ஆடைகளை அகழ்த்தியொரு போராட்டம் என்பது அசிங்கமாக இல்லையா. இவர்களை மன நோயாளிகள் பிரிவில் வைத்து உரிய வைத்தியத்தைச்செய்யவேண்டும். இதுபோன்ற கட்டாக்காலிகளின் செயல்பாடுகளைக் கண்டுதான் மற்றயப்பெண்களும் கெட்டுப்போவது.
ReplyDelete