Header Ads



ஈரானின் புதிய ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து


ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஹசன் ரௌஹானிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கு ஜனாதிபதி ரௌஹானியுடன் இணைந்து செயற்பட எண்ணியுள்ளதாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நவீன இராஜதந்திர ரீதியான உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு ஆறு தசாப்தங்களாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இரு நாடுகளுக்கும் இடையில் முன்பிருந்தே வரலாற்று ரீதியாகவும் இருதரப்பு உறவுகள் நிலவி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உங்களின் வாழ்த்தானது ஏதோ எதிர்பார்ப்பை நோக்கியதாகவே இருக்கும்.....தவறாமல் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பிலும் கலந்து கொள்ளுங்கள் நிச்சயம் பிச்சை கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.