திருகோணமலையில் மஞ்சள் மழை (படங்கள்)
திருகோணமலை நகர்ப்புறப் பகுதிகளில் இன்று (02.06.2013) மஞ்சள் மழை பெய்துள்ளதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.இன்று நண்பகல் பன்னிரண்டு மணியளவில் சுமார் ஐந்து நிமிடம் பெய்த மழை மஞ்சள் மழையாக பெய்துள்ளது. இதனை மசூதி வீதி,புதிய சோனகத் தெரு போன்ற வீதிகளில் குன்றும் குழியுமாக உள்ள இடங்களில் இந்த மழை நீர் மஞ்சளாக தேங்கி நின்றதை மக்கள் கண்டு அதிசயத்துள்ளனர். அதே நேரம் உள்துறைமுக வீதியிலும் இந்த மஞ்சள் மழை அவதானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Trincoவில் மஞ்சள் மழை அதிசயம்தான். ஆனாலும் திரு.ஏ.ஜே.எம். சாலி உங்கள் சாதுரியத்தைப் பாராட்டுகின்றேன். இதுதான் சாக்கு என்று சோனகத்தெரு மஸ்ஜித் விதிகளில் குன்று குழிகள் இருப்பதையும் குறிப்பிட்டு விட்டீர்களே.
ReplyDeleteவீதி அபிவிருத்தி சபையினர் நிறையவே 'மகிழ்ச்சி'யடைவார்கள்.