குன்றும் குழியுமாக உள்ள இப்பாதையை யார் திருத்துவது..?
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கொழும்பு-09 தெமட்டகொடை பேஸ்லைன் பாதைக்கு அருகாமையில் உள்ள 'ஜயவர்த்தன கார்டன் பாதை' நீண்ட காலமாக செப்பிடப்படாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் பிரதேச வாசிகளும் பாடசாலை மாணவர்களும் இப்பாதையை பயன்படுத்துவதில் பல்வேறு கஷ்டங்களையும், சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் இப்பாதையிலேயே வேலுவன தமிழ் மகா வித்தியாலயமும் அமைந்திருக்கின்றது. இதனால் பாடசாலை செல்லும் மாணவர்களும், அசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இப்பாதை முற்று முழதாக நீரினால் நிரம்பி காணப்படுகின்றது. இது குறித்து அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதேசவாசிகள் பலமுறை அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறுகின்றனர். அத்துடன் இப்பாதையிலுள்ள மின்சாரக் கம்பமொன்றும் முறிந்த நிலையில் காணப்படுகின்றது.
எனவே இப்பாதையின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்திலெடுத்து திருத்தித் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment