நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக்கழகம் சம்பியனானது
(சுலைமான் றாபி)
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் 30 வது நிறைவினையொட்டி அமரர் கே. கிருபேந்திரா அவர்களின் ஞாபகார்த்த நினைவாக நடாத்தப்பட்ட T20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று 23.05.2013 காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் இடம்பெற்றது. விவேகானந்தா (VSC) மற்றும் இம்ரான் (IMRAN) அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் நிந்தவூர் இம்ரான் அணி (120/7) மேலதிக 03 விக்கட்டுக்களினால் சம்பியனானது.
சர்வோதயம் அமைப்பின் திட்டமிடல் பணிப்பாளர் சி. நந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியர் எஸ். தமிழ் வண்ணன் அவர்கள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களின் பங்கு பற்றலுடன் இம்ரான் அணியின் தலைவர் என்.எம். நிப்ராசிடம் வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் உதவித் தவிசாளர் . கே. தட்சணாமூர்த்தி, உதவிக்கல்விப் பணிப்பாளர் . வி.ரி. சகாதேவராஜா, . தட்சிதானந்தம், திரு. கே. விஜயரட்னம், ராமகிருஷ்ணன், மற்றும் . வீ. ராஜேந்திரன் உட்பட இன்னும் முக்கிய பிரமுகர்களும் மற்றும் இரண்டு அணிகளின் ஆதர வாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
போட்டியின் இறுதியில் சிறப்பாட்டக்காரராக இம்ரான் அணியின் வீரர்களான சிரேஷ்ட வீரர் ரி.கே.எம். சவாஹிர், சுற்றுத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜே.எம். நிக்சி அஹமட், மற்றும் சுற்றுத்தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக எம்.சி.எம். உவைஸ் ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதே வேளை இன்றைய போட்டியில் இம்ரான் அணி மறைந்த வீரர் MSM நுஸ்கி அவர்களின் நினைவாக கறுப்புப்பட்டி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment