Header Ads



கல்முனையில் காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள்..!

(அலியார் பைஸர்)

அண்மைக்காலமாக கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில்  மோட்டார் பைசிக்கிள்கள் தொடராக இனம் தெரியாதோரினால் களவாடிச் செல்லப்படுவதாக கல்முனை பொலிசாருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றது.

இக்களவினை கட்டுப்படுத்த கல்முனை பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து சில செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. ஏ. கபார் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் நிலையம் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுடனும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனும் இணைந்து மோட்டார் பைசிகிள் திருட்டுச் சம்பவங்களை தடுப்பது மற்றும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான விழிப்பூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன்  பல விடயங்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மோட்டார் பைசிக்கிள்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன் ஹென்டில் புட்டு போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல், பைசிகிள் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் மோட்டார் பைசிகிளை தனிமைப்படுத்தாமல் இருத்தல் , அடிக்கடி பைசிகிளை நோட்டமிடுதல் , பைசிகிள் டயரில் உள்ள இலக்கத்தை குறித்து வைத்துக் கொள்வதுடன் பதிவுப்புத்தகம் , அனுமதிப்பத்திரம் , காப்புறுதிப்பத்திரம் , புகைப்பரிசோதனை சான்றிதழ் என்பவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ளல், பைசிகிள் காணாமல் போகுமிடத்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்தல் மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பைசிகிள் நிறுத்தப்பட்ட இடத்தில் நடமாடுபவர்பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு அறிவித்தல் தொடர்பாகவும்  கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.