உயிருடன் இருக்கும்போதே மண்டேலாவின் இறுதிசடங்கு தொடர்பில் சர்ச்சை
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94). கறுப்பர் இன விடுதலைக்காக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தற்போது இவர் உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
எனவேஇ அவர் கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார்.
அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் மகாஷிவேஇ மற்றும் ஷிண்ட்ஷி உள்பட உறவினர்கள் 16 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தான் இறந்ததும் தனது உடலை மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என மண்டேலா கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே அங்குதான் அவரது உடலை புதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அந்த குக்கிராமம் பிரடோரியாவில் இருந்து 600 மைல் தொலைவில் ஒரு மலையோரம் உள்ளது.
இதற்கிடையே ஆப்பிரிக்கா கண்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று தென் ஆப்பிரிக்கா வந்தார். ஜோகன்ஸ்பர்க் வந்த அவர் அதிபர் ஜேக்கப் ஷுவை சந்தித்து பேசினார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கோலத்தில் நெல்சன் மண்டேலாவை நேரில் பார்க்க அவர் விரும்பவில்லை. எனவே மண்டேலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொவேடோவில் உள்ள பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டக்கார்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர்.
Post a Comment