கிழக்கு மாகாணத்தில் கடும் வெப்பம் (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.ஜுனைதீன்)
கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெப்பமான கால நிலை இப் பிரதேச மக்கள் குறிப்பாக சிறியோர் முதல் முதியோர் வரை பல் வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பகல் நேரமானதும் இப் பிரதேசங்களில் சூரிய ஒளி சுட்டெரிக்கின்றது. தாங்க முடியாத வெப்பம் நிலவுகின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட மக்கள் பாதைகளில் நடமாட முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர்.
கடும் உஷ்ணத்தினால் பாதிக்கப்படும் இங்குள்ள மக்கள் குளிர் உணவுஇ குளிர் பானங்கள் என்பனவற்றையே நாடி வருகின்றனர். இப்பிரதேச பிரதான வீதியோரங்களில் சிங்கள சகோதர வியாபாரிகளால் இளநீர் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆங்காங்கே புதிய குளிர்பான நிலையங்களும் திறக்கப்பட்டு பப்பாஸ் சர்பத் இதோடம் பழ சர்பத்இ என்றெல்லாம் விற்பன செய்யப்படுகின்றது.
உஷ்ணத்தைத் தணிக்கும் பழ வகைகளும் துவிச்சக்கர வண்டிகளில் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றன.
Post a Comment