கிண்ணியா ஹனுன் நிஸாவின் கோமா விவகாரம் - வழக்கு ஒத்திவைப்பு
(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா,குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த ஹனுன் நிஸாவின் கணவர் அப்துல் மனாப் தனது மனைவியின் கோமா நிலைக்கு காரணம் வைத்தியசாலை தரப்பினரே! தனக்கு நியாயம் பெற்றுத்தருமாறு வேண்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் யூ.எல்.ஏ.அஸ்ஹர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்டது.
அப்பாதிக்கப்பட்ட பெண் ஹனுன் நிஸாவின் வழக்கின் எதிரிகளான வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சத்தார், ராபி, சாகிர் ஆகியோர் எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தெரிவிப்பதற்காக நீதிமன்றில் இன்னுமொறு தினத்தை தருமாறு நீதவான் முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை கருத்திற்கொண்ட நீதவான் இன்னுமொறு தினத்தை வழங்கினார். முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.ஹம்ஸா (மருதமுனை) ஏ.எல்.எம்.பாருக் (அக்கறைப்பற்று) ஆகியோர் கடந்த தவனையில் இரண்டாவது சத்திரசிகிச்சையில் சம்மந்தப்பட்ட வைத்தியர் நளீம் என்பவருக்கு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்தது. இருந்தபோதிலும் அவ்வைத்தியருக்கு அழைப்பானை சேர்க்கப்படவில்லையென தெரியப்படுத்திய வேளையில் எதிர்வரும் தவணைக்கு எதிரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற வைத்தியர் நளீமிற்கு நீதிமன்றத்திற்கு ஆஐராகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்தது.
எதிர்வரும் ஐ_லை மாதம் 26ம்திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளதாகவும், அத்தினத்திற்கு முன்னர் இரு சாராரையும் எழுத்து மூலமான சமர்ப்பணத்தை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதவான் யூ.எல்.ஏ.அஸ்ஹர் கட்டளை பிறப்பித்தார்.
உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி தேடி கோரப்பட்ட வழக்கு மிகவும் தீவிரமாகவும் அவசரமாகவும் விசாரிக்கப்படவேண்டாமா? பாதிக்கப்பட்டவரின் உடல் நிலையைக்கருத்திற்கொண்டும் அவருக்கு மேற்கொண்டு என்ன வைத்திய பரிந்துரை நீதிபதி அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் இதுபோன்ற தவறுகள் தற்போது சாதாரணமான் முறையில் நடக்கின்றது ஆகவே இதுபோன்றதொரு சம்பவத்திற்கு நீதி கிடப்பதன் மூலம் இன்னும் வைத்திய தர்மத்தை வியாபாரமாகவும் அவர்களின் விளையாட்டு பகுதி நேரப்பணியாகவும் அரசாங்க வைத்தியசாலைகளில் செய்த்து வரும் அரசவைத்தியர்களும் மற்றும் ஏனைய வெளி வைத்தியர்களுக்கும் இது ஒரு சரியான பாடமாகவும் சவுக்கடியாகவும் அமையவேண்டும். இன்று எத்தனையோ வைத்தியர்கள் சமுதாயங்களுக்காக தம் சேவைகளை செவ்வனே செய்து வருகையில் இதுபோன்ற அரைவேக்காடுகளின் இதுபோன்ற வேலைகள் வசதியற்றவர்களின் உடல் ஒரு பயற்சிப்பட்டறையாக இருக்கின்றது கவலைக்குரியவிடயம் மனிதர்கள் எல்லோருமே ஒன்றுதான் அதிலும் வசதியற்றவர்க்கு ஏதும் அனீதியிழக்கப்படும்போது யாவரும் குரல் கொடுக்கவேண்டும் அவர்களுக்கு கரம்கொடுத்து ஆதரிக்கவேண்டும். நாம் அனைவரும் சகோதரு ஹனூன் நிஸாவின் பக்கம் நின்று நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக்குவோம் இன்ஸா அல்லாஹ் இறைவன் நீதியாளன், மிக்க கருணையுடைவன்....
ReplyDelete