பள்ளிவாசல்களுக்கு செலவிடுவதில் காட்டும் கரிசனை பாடசாலைகளின் மீது இல்லை
(எம். ஸித்தீக் ஹனீபா)
முஸ்லிம் சமூகம் பள்ளிவாசல்களுக்கு செலவிடுவதில் காட்டும் கரிசனை கல்வித் துறையின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பாடசாலைகளின் முன்னேற்றத்தில் செலுத்துவதில்லையென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
வரக்காபொலை கலை இலக்கிய வட்டமும் வை.எம்.ஈ.ஏ அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த வரக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் அடங்கிய நீங்காத நினைவுகள் இறுவட்டு வெளியீடு மற்றும் இஸ்லாமிய இறுவட்டு கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவா இதனைத் தெரிவித்தார். கல்லூரி அதிபர் என்.ஜே.எம். தாசிம் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர் ஷா கலந்து கொண்டார்.
நீங்காத நினைவுகள் இறுவட்டின் முதல் பிரதியை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் ஒமார் பெற்றுக் கொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதித் தகவல் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் நலன் விரும்பிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
என்.எம். அமீன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊடகத்துறை என்பது எமது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒரு விடயமாகும். அதனை புறக்கணித்து விட்டு எம்மால் வாழ முடியாது. ஊடகத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இங்கு இடம்பெறும் இறுவட்டு கண்காட்சி அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்து விடுவதற்கான சில முயற்சிகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வரும் போது, வரக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஒரு முஸ்லிம் பாடசாலையாக இருந்து செயற்படும் அதேநேரம், அங்கு கல்வி கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்குவதன் மூலம் அது முன்னுதாரணமாக திகழ்கின்றது.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் பெரும்பான்மை சமூகத்தினருடன் நல்லுறவை பேணி வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இச்சமூகங்களை பிரித்து விடுவதற்கு வெளிநாட்டு அல்லது பிற சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் பலியாகக் கூடாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எமது மாணவர்களின் மிகத் திறமையானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சிறந்த முறையில் வழிகாட்டப்பட வேண்டும். அண்மையில் இலங்கையில் ஆளில்லா விமானமொன்றை கண்டு பிடித்த பதுளையை சேர்ந்த ஆபித் எனும் முஸ்லிம் மாணவனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஒரு கிராமத்தில் பிறந்து ஒரு ஆசிரியருக்கு மகனாக திகழும் அவர் சிறந்த முறையில் வழிகாட்டப்பட்டு இவ்வாறானதொரு முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம் அக்கறையில்லாத ஒரு துறையாக இன்று ஊடகத் துறை காணப்படுகின்றது. அதனை நாம் புறக்கணித்து வாழ முடியாது. எமது நாட்டில் 49 வானொலிகள் இருந்த போதிலும், முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு வானொலி கூட இல்லாத துரதிஷ்ட நிலையில் நாம் உள்ளோம். 17 தொலைக்காட்சிகள் இருந்த போதிலும், அவற்றுள் எந்தவொன்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இல்லை. 18 தேசிய நாளிதழ்கள் வெளியாகின்றன. இவற்றின் நிலைமையும் அதே விதமாகக் காணப்படுகின்றது.
பாடசாலைகளும் பள்ளிவாசல்களும் நமது இரண்டு கண்களாகும். பள்ளிவாசல்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நமது பாடசாலைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும். இதனை நம் சமூகத்தினர் மறந்து விடுகின்றனர். பள்ளிவாசல்களுக்கு எவ்வாறான முறையில் செலவிடுகின்றார்களோ அதேவிதமாக கல்வியைத் தொடரும் நம் மாணவர் சமூகத்தினருக்கும் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கும் செலவிடுவதில் நாம் பின்நிற்கக் கூடாது என்றும் அவர் நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் மேலும் தெரிவித்தார்.
எவர் ஒருவர் முஸ்லிம்கள் தொழுவதற்காக ஒரு பள்ளிவாசலை
ReplyDeleteகட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டை
கட்டுகிறான் .
mr.n.m.ameen pls be a practice muslim.not like lable muslim what the bbs says ? do you know that.sambirathaya muslim.pls grow beard put hat on your head.pls try to understand the muslim behaviour
ReplyDeletei agree mr ibnu masooth good said.may allah bless you. pls explain to this educated people
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete