மன்னாரில் வாகன விபத்து - முஸ்லிம் சகோதரர் வபாத்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மன்னாரில் 05-06-2013 மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரழந்தார் மற்றொருவர் காணமடைந்து அனுராதபுர வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் தோட்டவெளி கிராமத்திற்கு அருகில் டெக்டர் வாகனத்தின் பெட்டியில் பயணம் செய்தவர்கள் வாகனத்தின் பெட்டி பள்ளத்தில் விழுந்தபோது அதிலிருந்து இருவரும் வீசப்பட்டதன் காரணமாக காயமடைந்த நிலையில் இரு வரையும் வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டபோது அதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரழந்தவர் மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த அப்துல் சாதாத் எனும் ஒரு பிள்ளையின் தந்தையென தெரிவிக்கப்படுகின்றது. பிரேதம் மன்னார் வைத்திய சாலையில் இன்று வைக்கப்பட்டதுடன் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteயா அல்லாஹ்! இவரின் குற்றங்களை மன்னித்து இவருக்கு அருள்புரிவாயாக. உயர்ந்த சுவனபதியை இவரின் தங்குமிடமாக ஆக்குவாயாக. பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உள்ளத்தில் பொறுமையை ஏற்படுத்துவாயாக.
''நிச்சயமாக அல்லாஹ் அளித்ததும் அவனுக்குரியதே. அவன் எடுத்ததும் அவனுக்குரியதே. அவனிடம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு தவனையுண்டு. எனவே, பொறுமை செய்வீராக, நன்மையை எதிர்பார்ப்பீராக'' (புகாரி)