கொலையாளியின் திமிர் பேச்சு..!
கொழும்பு வர்த்தகர் முகமட் சியாம் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன, தான் கொலையாளி தான் என்று கூறியதாகவும், அவரைக் கைது செய்த போது புலனாய்வு அதிகாரிகளை மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்த அறிக்கையில்,
“நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் உங்களால் என்னை எப்போதும் உள்ளே (தடுப்புக்காவலில்) வைத்திருக்க முடியாது சானி ( குற்றப்புலனாய்வுப்பரிவு உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் சானி அபேசேகர).
நான் ஒரு கொலை காரன். ஒரு நாள் நான் வெளியே வரும் போது என்ன நடக்கும் என்று இருந்து பாருங்கள்” என்று வாஸ் குணவர்த்தன கத்தினார்.
கடந்த 10ம் நாள் மாலை அவரைக் கைது செய்த போது தான் அமர்ந்திருந்த நாற்காலியையும் அவர் தூக்கி வீசினார்.” என்று எழுத்து மூலமான தமது அறிக்கையில் குற்றப்புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, கொழும்பு வர்த்தகரைக் கொலை செய்வதற்காக பெற்ற 30 இலட்சம் ரூபா பணத்தில் 10 இலட்சம் ரூபாவை தனக்குத் தருவதாக, வாஸ் குணவர்த்தன தன்னிடம் கூறியதாக, இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான சுட்டா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுட்டா 4 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையா்களையும் கொலையாளிகளையும் தலைவா்களாகவும் உயா் அதிகாரிகலாகவும் கொண்டுள்ள எமது நாட்டில் எங்கு நீதி?
ReplyDeleteவாஸ் குணவா்த்தன கூறுவது போல் குற்றவாளிகளுக்க சில தினங்களில் பினை பல வருடங்களுக்கு பிறகு இரண்டு அல்லு நான்கு வருட சிறைத்தண்டனை. இது தான் நீருபிக்கப்பட்ட குற்றங்களுக்கு இலங்கை குற்றவியல் தண்டனை. மக்களும் மறந்து விடுவார்கள்.