Header Ads



இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லுங்கள் - ஜனாதிபதி மஹிந்த

ஆளும கட்சியுடன் இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சிக்குள் குழுக்களாக பிரிவடைந்து செயற்பட அனுமதியளிக்கப்பட மாட்டாது. ஆளும கட்சியில் இருக்க முடியாவிட்டால் குழுக்களாக அணி திரளாது விலகிச் செல்ல முடியும். குழுக்களாக பிளவடைந்த முடிந்த சிலரை நான் ஏற்கனவே அனுப்பியிருக்கின்றேன்.

எந்தவொரு நபருக்கும் தனிப்பட்ட ரீதியான கருத்துக்களை வெளியிட முடியும், அதில் தவறில்லை. எனினும் அவை ஆளும் கட்சியின் நிலைப்பாடாக அமையாது.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டையே அனைவரும் வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்டு வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

3 comments:

  1. இனியென்ன.. றவூப் ஹக்கீம் தெருவுக்கு வர வேண்டியதுதானே.. நாற்சந்திகளில் மேடை அமைத்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பற்றி நாவறள மணிக்கணக்கணக்கில் உணர்ச்சிகரமாக உரையாற்றலாமே..!

    ஸ்ரீ.ல.மு.காங்கிரஸை உள்வாங்கி ஆக வேண்டியதெல்லாம் முடிந்தாயிற்று. இனி நீங்கள் அரசுடன் ஒட்டிக் கொண்டு இருந்தால் என்ன..? வெளியில் போனால்தான் என்ன?

    இன்னும் கடுகளவு மரியாதை உங்களுக்கு இருக்கிறது.. அதாவது "வெளியேறுங்கள்" என்று ஆணை பிறப்பிப்பதற்கு முன்னதாக நீங்கள் வெளியேறி வருவது இருக்கின்ற முடி மயிரையாவது பாதுகாக்கும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ்ஈ காத்தான்குடி-

    ReplyDelete
  2. முடிவு எடுத்தபிறகு ஆணைக்குழு எதற்கு . ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே ........................... வெட்கமென்னே ..............................

    ReplyDelete
  3. சார் சார் நாங்கள் வெளியேற மாட்டோம்

    ReplyDelete

Powered by Blogger.