Header Ads



இலங்கையில் முதற்தடவையாக உலமாக்களுக்கான பல்கலைக்கழக கல்லூரி


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையில் முதற் தடவையாக அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியான உலமாக்களுக்கான பல்கலைக்கழக கல்லூரியொன்று மலிக் அப்துல்லாஹ் பல்கழைக்கழக கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் இது தொடர்பாக நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது இலங்கை நாட்டில் சுமார் 350 பதிவு செய்யப்பட்ட அரபு மத்ரசாக்கள் இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மத்ரசாக்களிலும் தலா 10 பேர் வெளியாகினால் வருடத்திற்கு மொத்தமாக 3500பேர் மௌலவிகளாக பட்டம் பெற்று வெளியாகின்றனர். இவ்வாறு வெளியாகின்றவர்களில் பலர் பள்ளிவாசல்களில் இமாம்களாகவும் மத்ரஸாவில் முஅல்லிமாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை.

'அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் சுமார் 05வருட காலத்திற்குள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவற்றில்; 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கத்தினாலும் 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரினாலும்; ஆரம்பிக்கவுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழக் கல்லூரிகளில் தனியாருக்கு வழங்கப்படவுள்ள 05கல்லூரிகளில் முதலாவது கல்லூரியாக மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிமை (11.6.2013) காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் நானும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் கையொப்பமிடவுள்ளனர்.

குறித்த  பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியில் அமைக்கப்படுகின்ற தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிகமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் ஜெயந்தியாய ரிதிதென்ன பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ளது.சுமார் 40 ஏக்கர் காணியில் 1500 மில்லியன் ரூபா செலவில்  நிர்மானிக்கப்படவுள்ளது. காத்தான்குடியில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்படவுள்;ள குறித்த பல்கலைக்கழக கல்லூரி 3 அல்லது 4வருடங்களுக்குள் நிரந்தர கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

ஆரம்பத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த கல்லூரியில் ஆரம்பமாக 125மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதுடன் நிரந்தர கட்டடத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னர் 1500மாணவர்கள் இணைக்கப்படவுள்ளனர். சுமார் 10 வருடங்களுக்குள்; 15ஆயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதுடன் நிரந்தர கட்டடத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழ் பல்கலைக்கழமாக அங்கீகாரம் பெறவுள்ளோம்.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள். இதனூடாக தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் பயிற்றுவிக்கப்பட்டு  டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.

நமது நாட்டில் மௌலவியாக பட்டம் பெற்ற உலமாக்கள் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அதே போன்று வறுமையாகவும் வாழ்கின்றனர்.
இவர்களுக்கு சிறந்த தொழில் வழிகாட்டலை எற்படுத்தும் பொருட்டும் அவர்களுக்கு இஸ்லாமிய உயர் கற்கையை ஏற்படுத்தும் பொருட்டும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை நிறுவத் தீர்மானித்துள்ளோம்.

இதனை உலகத்திலுள்ள சிறந்த இஸ்லாமிய பல்கலைக்கழகங்களுடன் இணைத்து அவற்றின் கல்வி திட்டத்தினையும் சேர்த்து சிறப்பான ஒரு பல்கலைக்கழக கல்லூரியாக இதை அமைக்க தீர்மானித்துள்ளோம்.

குறித்த இந்த பல்கலைக்கழக கல்லூரியில் கணிய அளவியல் மற்றும் படவரைஞர், நிர்மாண மேற்பார்வையாளர்,கட்டிடக் கலைஞர், தகவல் தொழிநுட்பம்,ஆங்கில மொழி என்பன போன்ற பாடநெறிகளுடன் இஸ்லாமிய உயர் கற்கை நெறிகளும் கற்பிக்கப்படவுள்ளன. 3 வருடங்களைக் கொண்ட இந்த டிப்ளோமா பாடநெறியில் 2 வருடங்கள் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரியிலும் ஒரு வருடம் இரத்மலானை கல்லூரியிலும் கற்கவுள்ளனர்.

அத்தோடு உலமாக்கள் அல்லாதோருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இங்கு விஷேட டிப்ளோமா பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த கல்லூரியில் படித்தல்,விடுதி உள்ளிட்ட சகல விடயங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன் உணவுக்கு மாத்திரம் பணம் அறவிடப்படும்.வறிய ஏழை மாணவர்களுக்கு விசேட சலுகைகளும் புலமைப்பரிசில்களும் வழங்கப்படும்.

இந்த கல்லூரியின் ஆளுனர் சபையில் அரசாங்க திறைசேரியினால் நியமிக்கப்படும் ஒருவரும் மற்றும் இளைஞர் திறனாய்வு  அமைச்சினால் நியமிக்கப்படும் இருவரும் ஹிறா பவுண்டேனசன் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் நானும் அதன் உப தலைவரான மாகாண சபை உறப்பினர் சிப்லி பாறூக்கும் ஆளுனர் சபையில் இருப்பார்கள்.

எந்தவித அரசியல் வேறுபாடின்றி அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த மலிக் அப்துல்லாஹ் எனும் சஊதி அரேபியா மன்னரின் பெயரிலான பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பித்து கொண்டு செல்லவுள்ளோம்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,பிரதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்;.


8 comments:

  1. வரவேற்கத்தக்க விடயம்..
    ஆனால் இச்சந்தர்பத்தில்
    பெ◌ாது பல காரனுங்க சும்மா இருப்பான்களா???

    ReplyDelete
  2. மிகவும் ஒரு நல்ல விடயம்.


    மவ்லவி என்றால், படிப்பு ஏறாத மக்கு மடையர்கள் என்ற கருத்தை முறியடிக்க இது நல்ல சந்தர்ப்பம்.

    ReplyDelete
  3. Masha Allah really its very important for Srilankan Muslims and non Muslims ( i would like to know the Age limit for the admission
    thank you

    ReplyDelete
  4. Masha Allah really its very important for Srilankan Muslims and non Muslims ( i would like to know the Age limit for the admission
    thank you

    ReplyDelete
  5. But the news article says 'without political interference' but it seems it is already politicized by the parties of the deputy minister, minister of skill development and so on.

    ReplyDelete
  6. welcome well try. Allah gives u best life.

    Sad think that u give DIPLOMA CERTIFICATE thay wil be diploma holder.
    I u arrange to give DIGREE CERTIFICATE that best benifit to Moulavi due to moulavis studing 7 years in madarasa n ur campus 4 years totaly 11 years.
    Finaly thay gets diploma certificate. So give Digree certificate to movlavi

    ReplyDelete
  7. மெளவி என்றால், படிப்பு ஏராத மாக்கு மடையர்கள் என்ற என்ற கருத்தை முறியடிக்க இது நல்ல சந்தர்ப்பம்''
    தம்பி ரியாஸ் அஹமத்!! கொஞ்சம் ஓவராத்தான் முட்டாள்த்தனமா பேசுறீங்க.!

    உங்களிடம் இருக்கும் கருத்தைப் போக்க இந்தப் பல்கலைக்கழகம்தான் நல்ல சந்தர்ப்பம் என்றால் அப்படியொன்று தேவையில்லை.

    ஏனென்றால், அங்கே படிப்பதற்கு உங்களைப் போல் யார் வாக்காலத்து வாங்குவார்களோ அவர்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    தன் ஆட்களுக்கு மட்டும் காங்கேயனோடை கூவாக்காட்டு வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதே அது போன்றுதான்.

    இவையெல்லாம் புரியாம பேசதீங்க.

    ReplyDelete
  8. alhamdulillah, In the footsteps of Ministers, Badi-Udin- Mahmood, A.H.M Ashraf, this is a giant step in Muslim Education in this country. I wish, the syllabus would be planned in a manner that the graduates who pass out will have good language skills of Arab, Sinhala, and English in addition to the subject matter. They should be versed in Islamic laws as applied to minority communities and be able to contribute to communal harmony. Brother Hisbullah, It is my humble opinion, that having a neutral sounding name or Sri Lankan flavoured name for the Institution rather than a Arab sounding name would make it easier to face the future bureaucratic red tapes.

    ReplyDelete

Powered by Blogger.