Header Ads



முஸ்லிம்களை சண்டைக்கு இழுக்கும் முயற்சி..!

(சத்தார் எம். ஜாவித்) 

கடந்த காலங்களில் சிறுபாண்மை இனத்தின் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் மேற் கொள்ளப்பட்டு வந்த இனவாதச் செயற்பாடுகள் தற்போது உணர்வு ரீதியாக மாற்றமடைந்துள்ளது.

அதாவது சிறுபான்மைச் சமுகங்களை பலவாறும் தீண்டி அவர்கள் எந்தவித்திலும் எதிர்த்து வராதது கண்டு கலங்கிய இனவாதம் இவர்களை ஏதாவது செய்து தம்முடன் மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய என்னம் அவர்களை நிம்மதியா இருக்க விடவில்லை என்பது தற்போது நிருபனமாகிவிட்டது.

சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களின் உணர்வகளில் மேற் கொள்ளப்பட்ட எதிர்ப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தால் தாமே தமத உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால்தான் இவர்களை சண்டைக்கு அல்லது வீணான வம்புக்குள் இழுக்கலாம் இதன் மூலம் அவர்களை தாக்குவதற்கான வழி என்ற கைங்கரியத்தை இனவாதிகள் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமே அப்பாவி பிக்கு ஒருவரின் தற்கொலையாகும். அதாவது அந்த பிக்குவை தவறான வழிநடத்தல்களில் இட்டுச் சென்று அவருக்கு இனவாதம் தொடர்பான சமயக் கல்வி விதைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தன்னையே மறந்து ஏன் தான் கற்ற சமயக் கல்விக்கு எந்தப்பலனுமின்றி தன்னை மாய்த்துக் கொண்டார்.

இச்செயற்பாடானது பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை சிறுபான்மை மீது பாய்ச்சுவதற்கான பாரிய முயற்சியாகும.; இதன் மூலம் சமாதானத்தையும், ஒற்றுமையையும் விரும்பும் உண்மையாக பௌத்த தர்மவாதிகளையும் , அப்பாவி மக்களையும் சிறுபான்மை மக்கள் மீது எதிரிகளாக ஆக்கும் செயற்பாடுகளாகவே அமைகின்றது. இந்த விடயத்தில் முஸ்லிம்கள் மேலும் பொறுமையும், அமைதியும் காக்கவேண்டும்.

உண்மையில் சிறுபான்மைச் சமுகங்களான முஸ்லிம், தமிழ் மக்கள் தம் மீது தற்போது மேற் கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புகளுக்கும், தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காது இருப்பதுடன் அவர்களுடன் எந்தவித தாக்குதல்களுக்கும் செல்லாது அமைதியாக இருக்கவேண்டியதுடன் முழுப் பொறுப்பையும் இறைவனிடத்தில் விட்டுவிடுவதே சாலச் சிறந்ததாகும். இதன் மூலம் தக்கதருணத்தில் இறைவன் எதிர்ப்பாளர்களுக்கு தண்டனை கொடுப்பான் என்ற நம்பிக்கை தான் இன்று எமக்குரிய ஆயுதமாகும். நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ் தண்டனை வழங்கியே தீருவான்.

மனிதன் படைக்கப்பட்ட காலம் தொட்டு மனிதன் உண்ணும் உணவில் இரு வகையான உணவுகளை உட்கொண்ட வருகின்றான் இந்தவகையில் மாமிச உணவு என்றும் மாமிசமற்ற உணவு என்றும் இரு வகையாக உண்டு வருகின்றான். இதனை தற்காலத்தில் இவர்கள் கட்டுப்படுத்தவதற்கான தேவைப்பாடு தேவையில்லை. ஏனெனில் இறைவன் மனிதர்களுக்காகவே உலகில் ஜீவராசிகளைப் படைத்திருக்கின்றான் அதன் மூலம் அவன் உயிர் வாழவேண்டும் என்பதற்காகவே.

அத்துடன் எல்லாச் சமயங்களுமே விலங்கு உணவுகளை உண்ணுவதை தடை செய்யவில்லை. இது இவ்வாறிருக்கையில் குறிப்பாக மிருகவதை என்ற போர்வையில் மிருகங்களை உண்ணக் கூடாதென்றால் மனிதன் பின்னர் எதை உண்ணுவது?

இனவாதிகள் கடல் உணவுகளையும், பறவைகளையும் உண்ணலாம் என்கின்றனர் அவ்வாறாயின் தரையிலும் , கடலில் வாழ்பவை உயிரினங்கள் இல்லையா? அவையும் உயிரினங்கள்தான் என்று அவர்களுக்கு தெரியவில்லை? ஏன் மரஞ்செடி கொடிகளும் கூட உயிரினங்கள் என்று இனவாதிகளுக்கு தெரிவதில்லையா?

இவ்வாறான நிலைமைகள் வரும் என்பதால் தான் இஸ்லாம் கூட இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே புனித அல்குர்ஆன் மூலம் மிருகவதையை விரும்பவில்லை என்பதனை முழு மனித சமுதாயத்திற்கும் உணர்த்தியுள்ளது.

அந்தவகையில் இஸ்லாமம் மிருகங்களை மனித உணவுக்காக பயன் படுத்தும்போது அவற்றை அறுத்துக் கொலை செய்யும்போது சில கட்டுப்பாடுகளையும் கூட விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டவை.

அதாவத மனிதன் உண்ண ஆகுமாக்கப்பட்ட ஒரு மிருகத்தை அல்லது விலங்கை அது மரணத்தின் வேதனையை அனுபவிக்காத வகையில் கழுத்தில் வெட்டச் சொல்வதுடன், ஒரே நேரத்தில் பலதை அறுக்கும்போது ஒன்றினை அறுப்பதை மற்றது காணாது அறுக்கப்படவேண்டும் போன்ற பல அற்புதமான விடயங்களை விலங்குகளை அறுக்கும்போது கடைப்பிடிக்குமாறு கட்டளை இட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இஸ்லாமியர்களை விட ஏனைய சமுகத்தினர் உயிரினங்களை கொள்வதை மிருகவதையை கண்டிக்கும் புள்ளுரிவிகள் கண்டு கொள்ளாது மார்க்கம் சொன்ன முறையில் மிருகங்களை அறுக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் தமது கோலைத் தனத்தைக் காட்டுவது அவர்களுக்கு அவர்களின் மதத்தில் நம்பிக்கை இல்லை என்பதனையே வெளிப்படையாகக் காட்டுகின்றது.

உண்மையில் உயிரினங்கள் எவை என்பதும் அவை ஏன், எதற்காக படைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான கற்றலே இவர்களுக்கு உடன் தேவையான கல்வியாகும். அதனை உரிய முறையில் கற்றிருப்பார்களானால் இவ்வாறான மிருகத்தனமான கொள்கைகளில்ஈ டுபட மாட்டார்கள்.

இலங்கையில் இன்று நூற்றிக்கு தொண்ணுறு வீதமானவர்கள் மாமிசம் உண்ணுபவர்களாகவே காணப்படுகின்றனர். இந்த நிலைமையில் மாமிச உணவுகளை மிருக வதை என்ற போர்வையில் எத்தனை வீதம் கட்டுப்படுத்த முடியும்?.

இந்த நிலைமைகளை சமய ரீதியான உணர்வுகள் மூலம் குழப்புவதற்கும் அதில் ஆதிக்கம் செலுத்தவதற்கும் மதங்களுக்கிடையிலான குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் தாம் வெற்றி காணலாம் என்ற தமது தீய கர்வச் செயற்பாட்டை மேற் கொள்ள முனைகின்றனர்.

உலகில் முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் பெரும்பாலானவர்கள் மாமிசம் உண்ணுபவர்கள்தான் அது அவர்களின் சமயம் மூலம் வழங்கப்பட்ட அனுமதியாகும். இவ்வாறுதான் ஏனைய சமயங்களும் மாமிச உணவுகளை உண்ணுவதில் தடைகள் போடவில்லை. ஒரு மனிதன் விரும்பினால் அவன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தனது உணவுகளை உண்டு கொள்ளலாம்.

இந்த வகையில் தற்போதைய இலங்கையில் சகல விடயங்களிலும் முஸ்லிம்களை பொறுமை இழக்கச் செய்யும் செயற்பாடுகளை அதிதீவிரமாக சில சிங்கள இனவாத அமைப்புகள் மேற் கொண்டு வருகின்றன.

சிறுபான்மை என்ற ஒரு காரணத்தால் அமைதியாகவும், பொறுமையாகவும் ஏன் சகிப்புத் தன்மைகளுடனுமே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ் நிலைமையில் மீண்டும் மீண்டும் தீண்டல்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை வன்முறைச் சமதாயமாக ஆக்குவதன் மூலம் இனவாதிகள் குளிர்காய விரும்பகின்றனர்.

இலங்கையில் இன்று சில இனவாதிகள் ஆட்சி அதிகாரங்களை தம்வசப்படுத்திக் கொள்வதற்கு சமயப் போதகர்கள் என்ற கோதாவில் அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்படுகின்றோம் என்ற வகையிலான முறையில் அரசாங்கத்திற்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளாகவே அமைகின்றதுடன் அரசாங்கத்திற்கு கூட கட்டுப்படாது தொடர்ச்சியாகவும் பகிரங்கமாகவும் இன்று சிறுபான்மை மக்களையும் அவர்களின் சமயங்களையும் தாக்குகின்றனர்.

மேற்படி நிலைமைகள் தொடருமானால் இலங்கையின் ஒருமைப்பாடும், அதன் கட்டுப்பாடுகளும் சீர்குலைந்து நாடு சின்னாபின்னமான நிலைமைகளுக்கே செல்லும். இதன் காரணமாக நாட்டில் ஒரு ஸ்திரத் தன்மை தோற்றம் பெற்று யாரும் யாருக்கும் கட்டுப்படாத நிலைமமைகளும் வன்முறைகளும் எற்படுவதற்கு முன்னர் நாட்டைப் பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தினதும், அதன் ஆட்சியாளர்களினதும் கடமையாகும்.

தற்போது சமாதானத்திற்கு குந்தகமாகவும், அமைதியான வாழ்விற்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படும் இனவாத கட்சிகளையும் . குழுக்களையும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மை கருதி அரசாங்கம் உடன் முளையிலேயே கிள்ளியெறிந்து தடை செய்வதையே புத்தி ஜீவிகளும் அமைதி விரும்பிகளும் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையைப் பொருத்தமட்டில் யுத்தக் குற்றம் செய்த நாடு என்று இன்று வல்லரசுகள் குற்றம் சுமத்தும் இவ்வெளையில் அதனை பாதுகாப்பதில் இஸ்லாமிய நாடுகள்தான் முன் நிற்கின்றன. இவ்வாறனதொரு நிலையில் இலங்கையில் முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக இருக்குமானால் அது இலங்கையின் எதிர்கால நலன்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இன்று பல உலக நாடுகளுக்கு குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தாக்கப்படுவதும், இஸ்லாத்திற்க எதிரான செயற்பாடுகள் முடிக்கி விடப்பட்டிருப்பதும் அதனை கட்டுப்படுத்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற செய்திகள் ஊடகங்கள் வாயிலாக இன்று பரவி வருவதும் இலங்கையின் இறையான்மைக்கு சவாலான ஒரு விடயமாகும்.

எனவே தற்போது சகல மக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதியற்ற நிiமைகளை கட்டுப்படுத்தி அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதுடன் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையிலும் பல்லின சமுகம் வாழும் நாடு என்ற வகையிலும் அணைவருக்கும் சமமான ஆட்சிமுறை கிடைக்கும் வகையிலும் அணைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என மக்களும், புத்தி ஜீவிகளும் கோரிக்கை விடுத்தள்ளனர்.

1 comment:

  1. Mr. Javeeth Mathakalaverththai Thunduverkal Velieya
    Samuthayaithai Amethieyak Valienadathiya Mr.Aashath Shaly Ulla Poanar
    Muslim Samukam Appadie Ponalum paruvaillie Enra Muslim Arasiyal Vathiekal
    Allahvukku Maddum Payanthu Kollunkal Enra Markkam Islam
    Thattpothu Mahinthaikkum Payppudum Muslim Thalaimaikal
    Ethu Aththaniaum Parthu Kondu Erunkum Nathi Attra Muslim Samukalm
    ===========Kalmunai Mohamed Fowse===============

    ReplyDelete

Powered by Blogger.