Header Ads



ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத் கடும் வாய்த்தர்க்கம்

(TM) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபை தேர்தல் தொடர்பிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானது ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட வேண்டும் என அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாமல் வட மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்றால் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பஷீர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடன் இணைந்த நிலையிலேயே கல்முனை மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இதனால் வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியும். இதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஹக்கீம் பதிலளித்துள்ளார். இதனையடுத்தே அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறாக சென்று கொண்டிருந்த சமயத்தில்இ 'உங்களுக்கு என்மீது நம்பிக்கை இல்லை. இதனால் நான் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்' என அமைச்சர் பஷீர்இ கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார். 

இதற்குஇ 'உங்களை எப்படி நம்புவது. கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது கட்சியின் அனுமதியின்றி பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தீர்கள். தற்போதும் கட்சியின் அனுமதியின்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுள்ளீர்கள். இப்படி கட்சிக்கு துரோகமிழைத்துள்ள நிலையில் உங்களை எப்படி நம்புவது' என அமைச்சர் ஹக்கீம் கட்சியின் உயர் பீட கூட்டத்தில் பஷீரின் கருத்துக்கு பதலளித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் கட்சியின் அதியுயர் பீட கூட்டம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படாமல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

8 comments:

  1. என்னடா இது.......மானம் போவுது........இஸ்லாத்தின் அபரிதமான வளர்ச்சியில் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுவது என்பது பாரிய ஒரு பங்களிப்பை செய்துள்ளது.....அன்று நபி அவர்களிடம் ஹுதைபியா உடன்படிக்கையின் போது சஹாபா தோழர்களின் தலைமைக்கு கட்டுப்படும் உயரிய பண்பு மட்டும் இல்லாது போயிருந்தால் சரித்திரம் புரட்டப்பட்டிருக்கலாம் (அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் ).

    இன்று விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரெஸ் இலங்கை முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கும் ஒரு சக்தி என்ற நிலையில் அதன் தலைமைக்கு கட்டுப்படுவது அக்கட்சியினர் மீது மட்டுமல்ல வாக்களிக்கும் போராளிகளுக்கும் காட்டாயம் (கடமை என்று சொல்ல வரவில்லை).

    இனி பஷீர் தாவூதிடம் ( என்னை பொறுத்த வரை ஒரு பேச்சாற்றல் மிக்க ஒரு முட்டாள்) இருந்து மிக விரைவில் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கும் அறிவுப்பு வரலாம் அல்லது ஏற்கனவே பிரிந்த துரோகிகளுடன் சேரலாம்....அல்லது அரசுடன் சேர்ந்து முஸ்லிம்களை பழி வாங்கலாம் .(முந்தியும் ஈரோஸ் ,EPRLF ல இருந்து அத தானே செஞ்ச ...அப்ப பழைய தொழில்)

    எரியிற வீட்ல எண்ணைய ஊத்துற மாதிரி இருக்கு இவங்க லட்சணம்..........

    ReplyDelete
  2. வழமையான உயர்பீட கூட்டம் தலைவருக்கு வசைமாரி பொழிவார்கள், இறுதியில் முடிவில்லாமல் கூட்டம் கலைந்துள்ளது ....இறுதியில் பண,பதவி பேரம் பேசலுடன் 13வது திருத்ததிக்கு அரசுக்கு ஆதரவு.....???

    ReplyDelete
  3. அடடா ... இது யாரு பசீர் ராஜபக்ச ,முதலில் இப்படியான பச்சோந்திகளை கட்சியை விட்டு வெளியே அனுப்புங்கள்

    ReplyDelete
  4. மு.கா.தலைவர் ஹகீமும்,அமைச்சர் பஷீர் சேகு தாவுதும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஹகீமும்
    சுயமாக முடிவெடுத்து விட்டு,தமது வக்கீல் தனத்தை பயன்படுத்தி விளக்கம்சொல்லுவார்,உயர்பீடமும் ஏற்றுக் கொள்வதாக பாசாங்கு செய்து தமது பதவிகளை காப்பாற்றிக் கொள்ளும்.பிரதேச சபை முதல் பாராளு மன்றம் வரை அங்கத்தவர்கள் சுயமாகவே முடிவெடுத்த எத்தணையோ நிகழ்வுகள்பதியப் பட்டுள்ளன.அமைச்சர் பஷீர் அவர்களின் இலக்கு தலைவருக்கேதெரியாமல் பெற்றுக் கொண்ட பதவியின் மூலம் வீதிக்கு வந்து விட்டது.ஒருவருக்கொருவர் கருப்பாடுகளாக செயல் பட்டு,மாண்பு
    மிகு முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹீம் M.H.M.அஷ்ரப்
    அவர்கள் சிந்திய இரத்தமும்,வியர்வையையும் கூட மலிவு விலைக்கு
    விற்று,பதவியும்,சுகமும் அனுபவித்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டே வாக்களிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை என்னவென்றழைப்பது.

    ReplyDelete
  5. clearly know one thing what ever who ever should be obey leadership. if you see about Hon mr.Basheer he most of the time cross the leaders order. it is not good habit a Muslim

    ReplyDelete
  6. Leader Hakeems first duty now is SENDING BASHEER HOME. That will be a great move..Obey leader, or go home

    ReplyDelete
  7. இந்த கூட்டத்தில் மக்கள் "வெட்டு ஒன்று துண்டோ ரெண்டு" என எதிபார்தார்கள் அனால் நீங்கள் இரண்டு பேரும் நன்றாக நடிக்கிறீர்கள்

    ReplyDelete
  8. பதவிகளுக்கு சோரம்போகும் லிஸ்ட்டில் இந்த பசீர் மட்டும்தானா? மற்றவர்கள் என்ன..... கட்சியின் தலைவர் என்ன.....
    ஆனால் பசீர் தற்பொழுது கட்சிக்கு ஆபதானவர் இல்லையா?
    அவசரமாக முடிவெடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.