Header Ads



'முஸ்லிம்களே இனவாதத்தை விதைத்தனர்' என்று ஜனாதிபதி கூறுகிறார் - அமைச்சர் அதாவுல்லா

(ரீ.கே.றஹ்மத்துல்லா)

அரசியல் அதிகாரம் வழங்கப்படாது அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்களாக கிழக்கு மாகாணத்தின் இரு எல்லைகளிலும் அமைந்துள்ள மூதூர் மற்றும் பொத்துவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இருந்து வருகின்றார்கள் என உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தொவித்தார்

பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கைளித்து வைத்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

முக்கியமாக பொத்துவில் பிரதேச மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குகளை அள்ளி வழங்கிவிட்டு வெல்லுவதைப் போல் இருப்பார்கள் ஆனால் அவர்களால் எதனையும் சாதிக்க முடிவதில்லை. பொத்துவில் பிரதேசமானது அதிகமான பிரச்சினைகளையும், சவால்களையும் கொண்டமைந்ததொரு பிரதேசமாகும். ஆனால் இது அரசியல் ரீதியில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருவது கவலைக்கரிய விடயமாகும். இருந்தும் இப்பிரதேச மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான வழி என்ன? எந்தக்கட்சியின் மூலமாக எமது பிரச்சினைகளையும், குறைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இருந்து வருகின்றார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொத்துவில் பிரதேசத்திற்கான வேலைத்திட்டங்களில் பங்கு கொள்ளுகின்ற போதும் எங்களை சமூகத் துரோகிகளாகவே  பார்த்திருக்கின்றீர்கள், காட்டியும் இருக்கின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களை ஒதுக்கி என்றுமே பார்ப்பது கிடையாது. நாம் அவ்வாறு ஊர்களின் அடிப்படையிலோ, தனிப்பட்வர்களின் அடிப்படையிலோ பிரிந்து நின்றவர்கள் அல்ல. பொத்துவில் பிரதேசமானது கிழக்கு மாகானத்தின் குறிப்பாக எமது சமூகத்தின் கண்ணாகவே இருப்பதால் நாங்கள் இங்கு தொடர்ச்சியாக வந்து கொண்டுதான் இருப்போம்.

இந்த பொத்துவில் பிரதேசத்தில் ஏதாவது நடந்திருக்குமாயின் அது தேசிய காங்கிரஸின் மூலமாகத்தான் இருக்கும். ஆனால் உங்களால் வாக்களித்து அனுப்பப்பட்டவர்களினால் எந்த வகையான உதவிகளும்  இப்பிரதேசங்களில் இடம் பெற்றிருக்காது. சமூகத்தின் குரலாகவும், சமூகத்தின் விடுதலையாகவும் என்று கூறிவரும் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் கால வார்த்தைகளைப் பார்ப்போமானால் சமூகத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது குரல் கொடுத்திருக்கவில்லை. ஆனால் நாங்கள் எங்டகளால் முடிந்தவற்றை செய்துவருகின்றோம்.

சந்தர்ப்பவாத அரசியல் மாத்திரம் செய்பவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்துவருகின்றது. இனவாதத்தின்னூடாக  இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டும் என்ற தேவை அவர்களிடம் உள்ளது. எப்போதுமே எமக்கு பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் யோசிக்கின்றார்கள். பொத்துவிலில் தினந்தோறும் பிரச்சினைகள் இருக்க வேண்டும் அப்போதுதான் முஸ்லிம் காங்கிரஸ் அதற்காக பேசுமென்று நீங்கள் வாக்குகள் போடுவீர்கள் என்று முதலில் இனவாதங்களை விதைத்தவர்கள் அவர்கள்தான். தலைவர் அஸ்ரப் தன்னுடைய மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே மாத்திரம் ஆரம்ப காலத்தில் இனவாதம் பேசினார். கடைசியில் அவர் இந்த இனத்திற்கு மாத்திரம் பேசி எதனையும் வெல்ல முடியாது என்று பொதுவான நுஆ என்ற இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

தலைவர் அஸ்ரபின் மறைவுக்குப்பின்னர் அக்கட்சியை பொறுப்பெடுத்த தலைமையானது இனவாதத்தை தன்னுடைய மூலதனமாகப்பாவிக்க முட்பட்டுவருகின்றது. இதனை நாம் கூறுவதற்கு காரணம் இருக்கின்றது. பொதுபல சேனாவின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம் அந்தவேளை ஜனாதிபதி கூறினார் இனவாதத்தை முதலில் உருவாக்கி அதனை தோற்றுவித்தவர்கள் நீங்கள்தான் என்று. ஆகவே நீங்கள் இனவாதம் பற்றி பேசக் கூடாது என்றார்கள்.

இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தினரில் எல்லோருமே இனவாதிகளாகவும், பிழையானவர்களாகவும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் அனைத்து விடயங்களிலும் இனவாதத்தைப்பற்றியே பேசிவருகின்றார்கள். இந்த இனவாதம் எம்மால் பேசப்படுகின்றது. நாம் பேசுகின்றோம் இதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணினால் பெரும்பான்மையாக இருக்கின்ற இன்னுமொரு குழவும் நமக்கெதிராக ஏசுவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் மேடை அமைத்து ஏச முடியும். ஆனால் பெரும்பான்மை இனத்தில் ஒரு சிறிய குழு எமக்கு ஏசுகின்ற போது அரசாங்கத்தை சாடுவதற்கு நாம் முனைகின்றோம். நாம் பேரினவாதிகள் என்றும், மஞ்சள் பிடவை என்றும் பேசுகின்ற போதும் அரசாங்கம் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.  குமாரியுடைய பிரச்சினையின் போதும், பேரினவாதப் பெண்ணின் பிரச்சினைகள் வந்த போதும் கூட அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஒன்றும் செய்யவில்லை.

ஆக இனவாதம் பற்றி பேசுபவர்கள் அதைப்பற்றி நியாயம் கேட்பதற்கு என்ன இருக்கின்றது. பொதுவாக இனவாதத்தை எல்லோருமே விடவேண்டும். இது ஒரு சிறிய நாடு இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் வாழ்வதற்கான வழி செய்ய வேண்டும்.

இனவாதம் பற்றி பேசுகின்ற நாம் யாராவது ஒரு அணியினரை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கின்ற நாம் அந்த எதிர்ப்பினை சாத்வீக மூலமாகவா? அல்லது ஆயுதம் ஏந்தியவாறாகவா? அதனை செய்ய முடியும். ஒன்றுக்கும் முடியாத சந்தர்ப்பத்தில் நாம் வெளியேறுவதாக இருந்தாலும் எந்த நாட்டுக்கு நாம் செல்வோம், யார் எம்மை கைகொடுத்து பாரம் எடுப்பார்கள் இவைகளை எல்லாம் ஆழமாக, தீர்க்கமாக யோசித்தால் கடந்த காலங்களில் றாஸீக் பரீட், டாக்கடர் கலீல் போன்றவர்கள் ஒவ்வொரு அரசியலில் இருந்து கொண்டும் பெரும்பான்மை மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிவகைகளை அமைத்துக்காட்டினார்களோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

மக்களுடைய வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக  கைகளை உயர்த்தி பேசுவதோ, அதே போன்று இனவாதத்தைப் பேசுவதனாலோ மக்களை சாந்திப்படுத்த முடியாது. ஏதாவது ஒரு பிரச்சினை வந்து பேச முட்படுகின்றபோது ஜனாதிபதியும், சிங்கள மக்களும் கூறுகின்றார்கள் இனவாதம் விதைத்வர்கள் நீங்கள்தான் எனவே நீங்கள் பேசக் கூடாது என்று. அரசியலுக்காக மேடைகளில் இனவாதம் பேசி அதில் வெற்றி கண்டவர்கள் நீங்கள். மற்றவர்கள் இனவாதம் பேசுகின்ற போது தலையிடுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் இனவாதம் பேசுவதில்லை.

கடந்த மாகாண சபைத்தேர்தலில் நடந்து என்ன முழுக்க, முழுக்க இனவாதம் கக்கப்பட்டது. மு.காங்கிரஸை வெறுத்திருந்தவர்கள் கூட அதற்கு வாக்களித்தார்கள். அதற்காக தம்புள்ளபள்ளி வாசலை துரும்பாக பயன்படுத்தினார்கள். அப்போது தம்புள்ள பள்ளியை உடைத்வர்களுக்கு, அதைப்பற்றி பேசியவர்களுக்கு எந்தவிதமான வார்தையும் கூறவில்லை. பதிலாக அரசாங்கத்தினையே கடுமையாக சாடிவந்தார்கள். கடும் தொணியல் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம் என்றார்கள். பின்னர் அரசாங்கத்தை திட்டித் தீர்த்தவர்கள் செல்லப்பிள்ளை போல் அரசாங்கத்தின் மடியில் அமர்ந்ததன் காரணமென்ன?

பள்ளிவாசல்கள் மட்டுமல்ல உலகிலுள்ள எந்த தேவாலயங்களும், வணக்க வழிபாட்டுத்தளங்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவே உள்ளோம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தம்புள்ள பள்ளிவாசலைப் போன்று இன்னும் அதிகமான பள்ளிவாசல்கள் உடைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.

பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் பள்ளி வாசல்களைப்பற்றி பேசுகின்றார்கள், முஸ்லிம் சமூகத்தினருக்கு ஏசுகின்றார்கள் என்று கூறுகின்றோம். அவை அதிகம் நடப்பது கிழக்கு மாகாணத்திற்கு வெளியே ஆகும். நாங்கள் கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கின்றோம், கிழக்குக்கு வெளியே இப்படியான சந்தர்ப்பங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் வடமாகாணத்தோடு சேர்வதற்கு ஒத்தக் கொண்டால் நாம் இப்போது சொல்லுகின்ற இனவாதம் கிழக்குக்கு வெளியே மிகவும் பாரதூரமாக அமையும், வடக்கு, கிழக்கில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்களே வாழ்ந்துவருகின்றோம். ஏனைய மூன்றில் இரண்டு பங்கினர் வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களைக் கூட எங்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும். நாங்கள்' செறிந்து வாழ்கின்றோம் என்ற பலத்திற்காக நாங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு தீர்மானமும் வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அது பெரும் பாதிப்பாகவே அமைந்து விடும் என்பது றவூப் ஹக்கீமக்குப் புரியாது.

அதிகாரப் பரவலாக்கல் என்பதற்காகவே 9 மாணங்களுக்கும் தனித்தனியான நிருவாக முறையின் கீழ் இயங்குவதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு இரு மாகாணங்களை ஒன்றாக இணைப்பது அதிகாரப் பரவலாக்கலாக அது அமைய முடியுமா? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆழவதற்கு கிழக்கு மாகாணம் தேவைப்படுகின்றது. அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும நோர்வே போன்றவர்கள் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஏனைய மாகாணங்களும் இரண்டாக அல்லது மூன்றாக இணைவதற்கு இணக்கம் தெரிவித்தால் நிலைமை எவ்வாறு அமையும் என்பதைப் பற்றி மக்கள் யோசிக்க வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான பிரச்சினைகள் வந்தவுடன் முஸ்லிம் காங்கிரஸ் காலை கிழப்புகின்றார்கள். நாய்க்கு எங்கு அடித்தாலும் காலையே கிழப்புவது போல என்ன விடயம் நடந்தாலும் அதாஉல்லாவைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். அவர்களின் கையாலாகாத தனத்திற்கு என்னைத்தான் அடகு வைப்பது.

13 வது திருத்த சட்ட மூலத்தில் காணி,பொலிஸ் உள்ளிட் பல விடயங்கள் இருக்கின்றன. இதில் மாகாணங்கள் இணைகின்ற வழிமுறைகள் இருக்கின்ற இச்சந்தர்பத்தில் வடமாகாணத்திற்கான தேர்தல் ஒன்றும் வரப் போகின்றது. எனவேதான் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பாக பாரளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் மூலம் ஆராயப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எற்பாடுகள் செய்யப்படுகின்றன. இத்தெரிவுக் குழுவில் தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்து தீர்த்துக் கொள்ள முடியும்.

இங்கு மாகாணங்கள் இணைந்து கொள்வதற்கானதும் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றியுமான விடயமே முக்கிய வகிபாகமாக இருக்கின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணம் இணைவதை கிழக்கு மாகாண மக்கள் ஒரு போதும் எற்றுக் கொள்ளவில்லை. கடங்த 30வருடங்களாக இவை இணைந்திருந்த போது அவ்வேளையில்17 முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் தெரிவுசெய்யபட்டிருந்தோம். ஆனால் எங்களால் எதனையுமே கண்டு கொள்ள முடியவில்லை. கிழக்கிலள்ள தமிழ் மக்களுக்கேனும் அந்த இணைந்த மாகாண சபை எதனையும் வழங்கி இருக்கவில்லை.

தற்போது கூறிவரகின்றார்கள் அதாஉல்லா 13ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிரானவர் என்று. அவ்வாறு 13 எதிராவில்லை. அதில் இருக்கின்ற சில சரத்துக்களுக்கே எதிராக இருக்கின்றேன். இணைகின்ற சரத்து நீங்க வேண்டும், பொலிஸ் அதிகாரம் பற்றி பேச வேண்டும்.

ஆனால் இன்று 13 ஏதோ முஸ்லிம்களின் வரப்பிரசாதமாகவே றவூப் ஹக்கீம் பேசித்திருகின்றர். தற்பொது உலமாக்களும் இது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்றும் திட்டித்தீர்க்கின்றார். உலமாக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் போதாதென்று இதற்கள்ளும் இழுத்து வருகின்றார். அதற்காகத்தான் மக்கள் அரசியல் தலைமைகளை அனுப்பி இருக்கின்றார்கள். இவ்வாறான விடங்களை பார்ப்பதுதான் அரசியல் தலைமைகளின் கடமையாகவுமள்ளது.

தம்புள்ள பள்ளிப்பிரச்சினையை  எடுத்தது போன்று இப்பொது 13ஐ இல்லாமல் செய்யப் போகிறர்கள் என்ற கோசத்தை எழுப்பினால் மீண்டும் முஸ்லிம் மக்கள் தன்னுடன் வருவார்கள் என்று எண்ணுகின்றார்கள். அரசியல் செய்பவர்கள் காத்திரமாக எதையாவது செய்ய வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு அவர்களின் எண்ணங்களை புரிந்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும். அல்லது அந்த மக்களின் குரலாகவும், விடுதலைக் குரலாகவும் இருக்க வேண்டும். அவை எதுவுமே செய்யாது வடக்கிலிருந்து பிரிந்து கிழக்கில் நிம்மதியாக வாழ்ந்துவரும் மக்களை மீண்டும் வடக்கோடு சேர்ப்பதற்கு வாக்களித்த மக்களுக்கு துரோகத்தை எண்ணப்பார்க்கின்றார்கள்.

எங்களுக்குள்ள பிரச்சினைகளை நாங்கள் முறையாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். டயர்களை எரித்து, போர்க்கொடி தூக்கி யாருமே வெற்றி கண்டதில்லை. பல்லாயிரக்கணக்கான டயர்கள், உயிர்கள், ஆயுதங்கள் இருந்தும் இன்னமும் ஒரு தீர்வும் கிட்டவில்லை.

முஸ்லிம்களை பொறுத்தவரையில் இதற்கு வேறு மார்க்கங்கள் ஏதும் தென்படுமாகவிருந்தால் அந்த வழியை நாம் பின்பற்றலாம். குறிப்பாக முஸ்லிம் மக்கள் எப்பொழுதுமே விட்டுவருகின்ற ஒரு பிழை இருக்கின்றது. ஆட்சிக்கு எந்த அரசாங்கம் வரப்போகின்தோ  அதற்கு எதிராகத்தான் வாக்களித்து நிற்பது. வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களும் இதைத்தான் செய்கிறார்கள். கடைசியில் முஸ்லிம்கள்  எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற உணர்வுடன் அவர்கள் எங்களைப்பார்ப்பது. தற்பொது இருக்கின்ற ஜனாதிபதிக்கு முஸ்லிம்களில் கனிசமானவர் வாக்களிக்கவில்லை. ஆனால் நாங்கள் நினைப்பது எங்களுக்கம் செய்து தரவேண்டும் என்று. அந்த உரிமையை நாங்கள் கையில் எடுக்க வேண்டும்.  தற்பொதுள்ள ஜனாதபதிக்கு 80 சதவீதமான சிங்கள மக்களின் வாக்குகள் இருக்கின்றன. அவர் உயிரோடு இருந்தால் அடுத்த முறையும் அவர்தான் ஜனாபதியாக வருவதற்கு முடியும். எனவே நாம் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

7 comments:

  1. அமைச்சர் அதா அவர்களே நீங்கள் இனவாதி மட்டுமல்ல,
    நல்ல கூத்தாடியும்,வேடாதரியும் கூட, மக்கதாரை வாப்பா என்று கூறுவதை விட்டு மகி ராசாவை வாப்பா என்று கூறினாலும் ஆச்சரியமில்லை....அரசியலில் நிலைப்பதற்காக எதை எல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வீர்கள் ..மு.கா.வினால் அரசியல் அரிச்சவடி பெற்ற அனைவருமே அவ்வாறுதான் உள்ளனர் அதிலும் நீங்கள் ஒரு படி மேல், தங்களை விட அரசியல் முதிர்ச்சி பெற்ற அமைச்சர்கள் வாசு,ராஜித,திஸ்ஸ போன்றோர் 13 நீக்கத்திற்க்கு எதிராக வெளிப்படையாகவே குரல் கொடுக்கும்போது ....தமிழை தாய் மொழியாக கொண்ட தாங்கள் 13 ஒழிப்புக்கு வக்காலத்து வாங்க முயல்வது அமைச்சர் பதவி மூலம் அனுபவிக்கும் சுகபோகமும் , அதைவைத்து நீங்கள் செய்யும் முறைகேடுகளும் ஜனாதிபதி அறியாதது அல்ல, அதனால் அவர் 4+3=6 என்று சொன்னால் தோப்பு கரணம் போட்டு சரி என்பீர்கள் அது தான் யதார்த்தம் ..

    ReplyDelete
  2. Are you trying to tell us that:
    Muslims are protesting against dress code of the non-Muslims, Idol worship, and consumption of liquor.
    They are encroaching Buddhists’ land and chasing them out from their prominent places.
    Protesting against slaughtering pork for consumption as it is prohibited in Islam.
    Buddhists are not involving in any racial activates and they are tolerating all of our racial activities.
    Are you a brother of Azwar?
    You don’t have the power to distribute houses constructed for tsunami victims and prevent land problems of eastern province.
    When President says that Muslims are racist, you have to oppose it and explain him the problem faced by Muslims to get our rights. Instead of defending us you are also accusing us by accepting his statements.

    ReplyDelete
  3. சபாஷ்... குதிரை களத்தில் குதித்துள்ளது... சூடு சொறனையற்ற தலைவர்களை நம்பி என்ன பிரயோசனம்... அவர் கூறியது போன்று மக்கள் இவர்களை தலைவர்களாக ஏற்றுத்தான் வாக்களித்து பாராளமன்றம் அனுப்பினார்கள்.. இவர்கள் அங்கு சென்று கிழித்தது என்ன??? அவர்களின் சுக போகங்களுக்காக் அரசங்கத்திற்க்கு ஜால்ரா போட்டதும் காட்டிக்கொடுத்ததும்தான்... இந்தக் குதிரையின் பார்வையில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடப்பவை எதுவும் இனவாதமல்ல.. இவைகளை செய்வது முஸ்லிம்கள்தான் என்று இவருக்கு ஏதும் தேவை ஏற்படின் கூறுவார்... மற்றக்கட்சிகள் இவரைப்பற்றி பேசுவதை விட இவர்தான் மற்றவர்களை பற்றி அதிகமாக புரம் பேசுவார்... பேரியல் அஸ்ரபை பேய்க்குழந்தை என்றார்...பேரியல் அஸ்ரபை போல் ஒருவரை சோடித்து வீதி ஊர்வலம் வந்தார்... ஹகீமை குமாரி என்றார்... அரசியல் நாகரிகம் பற்றி பேசுவதற்க்கு இவருக்கு தகுதி இல்லை... அரச ஆசீர்வாதத்துடன் இடம்பெறும் இன குரோதங்கள் பற்றி பேசினால் இனவாதம் என்கிறார்... இவர்களைப் போன்றவர்கள் அரசியல் செய்யும் வரை சிறுபான்மை சமூகத்திற்க்கு ராஜித, வாசுதேவ போன்றவர்கள் தான் இனவாததிற்க்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்... எமது தலைவர்கள் அவர்களின் சுகபோகத்திற்க்கும் சுயநலத்திற்காகவும் மாத்திரம் குரல் கொடுப்பார்கள்.... இவர்களைப் போன்றவர்கள் சமூகத்திற்க்கு சாபக்கேடு....

    ReplyDelete
  4. எல்லாம் நியாயமான கோரிக்கைதான். எதிர்வரும் பொதுத்தேர்தலில்கூட ஜனாதிபதிக்கு 80 வீதமான வாக்குகள் இருப்பது என்பது யோசிக்கவேண்டிய விடயம் தற்போது சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரே ஜனாதிபதியுடன் அதிருப்தியான நிலையில்தான் இருக்கின்றார்கள் அதை எதிர்வரும் தேர்தலகளில் பார்க்கலாம், இதுபோன்றதொரு வார்த்தையினால்தால் சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் முதலில் இரண்டாக உடைந்தது. அது வேண்டாம்.

    நீங்களும் ஏனைய முஸ்லிம் தலைவர்கள் போல மதவெறியர்களின் விடயத்தில் மெளனமாக இருந்தீர்கல் மாதவாதத்தை உருவாக்கியவர்கள் நாம்தான் அதனால் நாம் பேசக்கூடாது, ஆனால் கிறீஸ்மனிதனை உருவாக்கியதும் நாம்தானா? அத்துடன் நீங்கள் செய்தவைகள் அனைத்தும் நல்லவிடயம்தான் மக்களுக்கு நிறையவே செய்துள்ளீர்கள் மற்றவர்கள் உங்கள் அளவிற்கு செய்ததே இல்லையென்று சொல்லாலாம் அது அனத்து இடங்களிலும் பரவலாக நடந்துள்ளது என்பதை நியாயமாகச்சிந்திப்பவர்கள் சொல்வார்கள். ஆனால் உமது ஊரில் இளைஞர் சமுதாயம் சீர்கெட்டு அடிதடியே அவர்களின் நிலைப்பாடு என்றும் எடுத்ததெற்கெல்லாம் சண்டையென்பதுமாகவே இருக்கின்றது இதற்கு சேகு இஸ்ஸதீன் தவம் மற்றும் நீங்களும் காரணம் இந்தச்சீர்கேட்டுக்கு மறுமையில் நீன்கள் அனைவரும் வகைசொல்லும் வரை நீங்கள் யாரும் தப்பிக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.. ஆகவே இச்சீர்கேடுகளுக்கு நீங்கள் மூவரும் ஏதாவது பரிகாரம் செய்து இளைஞர்களை பண்படுத்தி நல்லதோர் சமுதாயத்தை உருவாக்குவது உமது கடமை அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்...

    ReplyDelete
  5. ஐயா குதிரைத்தலைவரே!!!! நீங்கள் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையின் போது எங்கே ஓடி மறைந்தீர்கள் அப்போது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் அணிவது சல்வார் என்று...நீங்கள் இறுதியாக எப்போது சுபஹு தொளுதீர்கள் என்று ஒரு ஒரு மேடையில் சொல்ல முடியுமா எதற்கு எடுத்தாலும் இசைக்கச்சேரி வைக்கும் உங்களுக்கு பள்ளி பற்றி பேச என்ன அருகதை உள்ளது. உங்களது அபிவிருத்தியின் லட்சணம் அக்கரைப்பற்று பிரதான வீதியின் அகலத்திலும் உள் வீதிகளின் குன்று குளியிலும் நன்றாக தெரிகிறது.சமூகத்தை காட்டிக்கொடுத்து பின்கதவால் பணம் பெறும் உங்களை போன்றவர்களுக்கு என்ன தெரியும்?தலைவர் இன்று இருந்திருந்தால் உனங்களுக்கும் ஒரு முனாபிக் பட்டம் தந்து இருப்பார்....

    ReplyDelete
  6. All politicians are same,accusing each-other.we Muslims not started any racist activities.even Muslim congress involeved after the attack of Dambulla Mosque.selfish politicians are the main cause of our problems.

    ReplyDelete

Powered by Blogger.