Header Ads



இலங்கையில் அரபு மதரசாக்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார் தொடுத்துள்ள யுத்தம்

(Mohamed Ismail Umar Ali)
                  
                இன்று இலங்கையப் பொறுத்தவரை  பௌத்த மதகுருமாரில் ஒருசிலரால் அதிகமாக உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல் இஸ்லாமிய அடிப்படைவாதம்  என்ற சொல் என்று சொன்னால் அது மிகையாகாது.

                     மதங்களும் நம்பிக்கைகளும் இன்று நேற்று தோன்றியவையல்ல,அவை மிகவும் தொன்மையானவை. ஒவ்வொரு மதமும் அதன் கோட்பாடுகளின் அடிப்படையில் விழுமியங்களைக்  கொண்டிருப்பதுடன்  அந்த மதத்தை பின்பற்றக்கூடிய மக்களால் ஏற்படுத்தப்பட்ட தனிப்பட்ட கலாச்சாரங்களையும்  கொண்டிருக்கும்.இந்தக்கலாச்சாரம் மத நம்பிக்கையையும்,மத போதனைகளையும் அடியொற்றியதாகவே இருக்கும்.இருக்கவும் வேண்டும்.

                              நாகரிக  வளர்ச்சி,நவீன ஆடம்பர வாழ்க்கை முறை,ஓரிடம்விட்டு வேறிடம் சென்று வாளுதல்பிற சமயத்தைப்பின்பற்றி வாழ்வோரின் மத்தியில் நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கை போன்றன  உலகில் எல்லா மதங்களைப் பின்பற்றுவோரையும் வெகுவாகப் பாதித்துள்ளது ,அவர்களது சமயப்பின்பற்றல்கள் ,நடையுடைபாவனை போன்றவை மாறியிருகின்றன என்பது யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தெளிவான விடயம். அந்த வகையில் இஸ்லாம் மார்க்கமும் அதனைப் பின்பற்றும்  முஸ்லீம்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல.

                 ஒரு மதத்தினை ,அதன் கோட்பாடுகளை அந்த மதம்சார் மக்கள் மறந்து  வழிமாறிச்செல்வதை தடுக்கவும்,ஒழுக்க விழுமியங்களை  அம்மதம் சார் சமூகத்தில்  நிலை நாட்டவும் மதகுருக்கள்  உருவாக்கப்படுகின்றார்கள் அதேவேளை  அம்மதம் சார் கொள்கைகளை மற்றவருக்கு எடுத்துக்கூறி  தம் மதத்தை  பரப்பவும் செய்கின்றனர்.இந்த மதகுருக்கள் மத நூல்களை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து கற்றவர்கள்,எந்தப்பிரச்சினையையும் அணுகி அதற்க்கு  அம்மதக் கொள்கைகள்,சட்டங்களூடாக விளக்கம் கொடுத்து தீர்வும் கூறக்கூடியவர்களாகவும் இருப்பார்.

                            இவ்வாறான மதகுருக்களை  உருவாக்குவதற்கு அந்தந்த மதங்கள்  தத்தமக்கேற்றால்போல  பாடசாலைகளை அமைத்து தத்தம் சமயங்களை பாதுகாக்கும்  நடவடிக்கைகளை மேட்கொள்ளுகின்றனர்,அந்தவகையில் பௌத்த மதத்தினர் பிரிவேனாக்கள் மூலமும்,இந்து மதத்தினர் அறநெறிப் பாடசாலைகளையும் ,கிறிஸ்த்தவ கத்தோலிக்க மதத்தினர்  மறைப் பள்ளிக்கூடங்களையும் ,முஸ்லீம்கள் அரபுக் கல்லூரி எனப்படும் மதராசாக்களையும்  நடாத்துகின்றனர்.நவீனத்துவத்தின்  தாக்கங்களில் இருந்து தம் சமயம்  நிலை தடுமாராதிருக்க  எடுக்காபடும் இந்தப்பணி காலத்தின் தேவையும் கூட.

                     இவ்வாறான  நோக்கில்  நடைபெறுகின்ற அரபிக் கல்லூரிகளை  அடிப்படைவாதத்தை கற்பிக்கும் இடம் என்று விமர்சிக்கின்றார்கள் அப்பெடியென்றால்  விமர்சிப்பவர்கள் தமது பௌத்த நெறியை பாதுகாக்க பிக்குகளை பயிற்ருவிக்கும் பிரிவேனாவும் இதன்கீழ்தானே வருகின்றது?அரபுக்கல்லூரிகளில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுகின்றது என்று ஞானாசார தேரர் கூறுகின்றார் அப்படியாயின் பிரிவேனாக்களும்  இதைத்தான் செய்கின்றனவா?

                       அரபு மதராசாக்கள் தனிமனித வாழ்வு,குடும்ப வாழ்வு,சமூக வாழ்வு, போன்ற மனிதவாழ்க்கையின் இன்னோரன்ன விடயங்களை இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குரான்,முகம்மது நபி (ஸல்)அவர்களுடைய வாழ்க்கை ,இஸ்லாமிய வரலாறு,சட்டம்  போன்றவற்றினூடாக தெளிவு படுத்துகின்ற நிறுவனங்களேயன்றி  பயங்கரவாதத்தையோ பிரிவினையோ,மனுகுலத்திட்கு தீங்கு விளைவிக்கும்  எந்தஒரு விடயத்தையும்  போதிக்குமிடங்களல்ல.இங்கு சமத்துவம்,சகோதரத்துவம் ஜீவகாருண்யம்,பாவங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளல்,இஸ்லாமிய அடிப்படைக்கடமைகளின்  நுணுக்கங்கள்  போன்ற சமூக வாழ்க்கையை நெறிப்படுத்தும் 
கலைகளே போதிக்கப்படுகின்றன.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்  என்பதுபோல் முஸ்லீம்கள் எது செய்தாலும் அது பௌத்தமதத்திற்கு எதிரானது என்று சில பௌத்த துறவிகள் பகுத்தறிவை மறந்து விட்டுப்பேசுவது  இலங்கைவாழ் முஸ்லீம்களின் மனதை மிக ஆளமாகப்பாதித்துள்ளது,

                  பிறர் மனம் புண்பட நடக்காதே எனக்கூறும் புத்த தர்மத்தை போதிக்கும்  இவர்கள் அந்த போதிமாதவனின் போதனைகளை பொதிகட்டிவிட்டு இன்று மேடை போட்டு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.உயிர்கொலை பற்றி பேசும் இந்த பௌத்த குருமாருக்கு மாடு மட்டும் உயிரினம் மற்றவையெல்லாம் உயிரற்ற சடப்பொருளாகத தென்படுவது வேடிக்கையான  ஒரு கூற்றே!

முன்பெல்லாம் முக்கா ட்டுடன் வீடுகளில் முடங்கிக்கிடந்த முஸ்லீம் பெண்கள் இன்றைய நாகரிக உலகில் நடமாடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது,இவ்வாறு வெளியுலகில் தொடர்புகளை  ஏற்படுத்தும் பெண்கள் தமது சமய முறைப்படி தனது உடலை பிறருக்கு தெரியாமல் மறைத்து உடையணிய வேண்டியது கட்டாயம் இது இஸ்லாமிய சட்டம்.இவ்வாறு தம் சமய சட்டத்தை பின்பற்றுவது எந்தவகையில் பௌத்தர்களைப் பாதிக்கின்றது என்று இன்னும் இவர்கள் தெளிவு படுத்தவில்லை,இது அடிப்படைவாதமாம்,அப்படியென்றால் இஸ்லாம் அழியவேண்டுமென்று விரும்புகின்றார்களா இந்த பௌத்த மதகுருக்கள் ?

                    விரைவாக முன்னேறிவரும் உலகத்தில் பொருள்களின் புழக்கம்,பொதியிடப்பட்ட உணவுகள் ,சமைத்த உணவுகள்  போன்றன வித்தியாசமான வடிவங்களில் சந்தைகளில் காணப்படுகின்றன இஸ்லாமிய சட்டத்திற்கேற்ப  முஸ்லீம்கள் தமது உணவை தெரிவுசெய்ய ஏன் இவர்கள் தடையாக நிற்கின்றார்கள்?இதுவல்லவா  பயங்கரவாதம் ?

             பௌத்த மதத்தில் மற்ற மதங்கள் இலங்கையில் இருக்கக்கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டதுண்டா?முஸ்லீம் ஊர்களின் மத்தியிலும் ,இந்துக்கள் நிறைந்துவாலும் ஊர்களிலும் புத்தர் சிலைகளை நிறுவுவது ஒரு பயங்கரவாதச்செயலில்லையா?

             நான்கு நிகாயாக்கள் இருப்பதுபோல முஸ்லீம்கள் தாம் கடைப்பிடிக்கும் சிறு விடயங்களில் கருத்து வேறுபாடடைந்திருப்பது  அவர்களது தனிப்பட்ட விடயம்.இதில் என் பௌத்த துறவிகள்  தலையிட்டு கருத்து தெரிவிக்கின்றார்கள்.

              பௌத்தர்கள்  பௌத்தராக வாழட்டும் முஸ்லீம்கள் முஸ்லீம்களாக வாழட்டுமே இதில் ஏன் ஒரு குழு மற்றைய குழுவை அழிக்க அல்லது அவர்களது சமய சம்பிரதாயங்களை விமர்சிப்பது மட்டுமன்றி அவற்றை நிறைவேற்ற தடையாகவும் இருக்கின்றது?

               இன்று குறிப்பிட்டசில தேரர்களின் முகங்கள்  கொடூரமானவையாகக் காட்சியளிகின்றன , அமைதியையும் சாந்தத்தையும்  பிரதிபலிக்க வேண்டிய குரல்கள் ஆவேசமாக  கனைக்கின்றன , அநாகரீகமான வார்த்தைகளை கொப்பளிக்கின்றார்கள். வரலாற்றில் முஸ்லீம்களுக்கெதிராக இல்லாததும்  பொல்லாததும்  திரித்துக் கூறப்படுகின்றன.இஸ்லாமியர்களினைப் பற்றி இஸ்லாமியவரலாறு பற்றி தவறான கருத்துக்களை  பௌத்தர்களுக்கு எடுத்துக்கூறும் இவர்கள் முஸ்லீம்களது கடைகளில் வர்த்தக தொடர்பு வைத்திருக்க கூடாது என்று மேடைகளில் கூறுகின்றனர் துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகிக்கின்றனர்,சுவரொட்டிகள் ஓட்டுகின்றனர். இவை அனைத்தும் பயங்கரவாதச் செயல்கலாகவே கருதப்படவேண்டும்.

               முஸ்லீம்கள் தமது மத ,விழுமியங்களையும் கலாச்சாரப் பண்புகளையும் சரியான  பாதையிலே கொண்டு செல்ல எடுக்கும் நடைமுறைகள் எந்தவிதத்திலும் பௌத்தத்தயோ வேறு எந்த மதத்தையோ பாதித்திருக்கவில்லை, அப்படிப்பாதிக்கவும் மாட்டாது.

                 எனவேதான் பௌத்த குருமார் முஸ்லீம்களது மதரசாக்கள்  பயங்கரவாதத்தைக் கற்பிக்கின்றன என்று கூறுவதனை நிறுத்தவேண்டும்,மட்டுமன்றி முஸ்லீம்களை விமர்சிப்பதிலும் இருந்து தவிர்ந்து கொள்வதே புத்த பகவானது  கோட்பாடுகளை கொலைசெய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்.

No comments

Powered by Blogger.