Header Ads



தேசிய ஷூரா பேரவை தொடர்பான ஒரு பார்வை..!

(பர்ஹான் பாரிஸ்)

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை என்பதில் சந்தேகமில்லை. இது இன்றைய காலத்தின் தேவையுமாகும். எமது சமூகத்திற்கு கூட்டுத் தலைமைத்துவத்தை வழங்க உழைக்கும் சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. உண்மையில் இம்முயற்சி பாராட்டதக்கதாகும். எனினும் இக்கூட்டுத் தலைமைத்துவம் எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? தேசிய ஷூரா பேரவையின் மூலமா அல்லது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மூலமா என்று சிந்திக்கும் போது பல நேரெதிரான கருத்துகள் தோன்றுகின்றன. இதன் பிரதிபலிப்பை இன்று சமூகத்திலும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மூலம் கூட்டுத் தலைமைத்துவம் வழங்கப்படுவதே  மிகவும் பொருத்தமானது என கருதுகிறேன். இதற்கான சிறந்ததொரு பொறிமுறையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

இந்நிலையில் தேசிய ஷூரா பேரவையின் உருவாக்கம் தெடர்பான தீர்மானத்திற்கு வருவதற்கு இதன் உருவாக்கத்தில் எமது சமூகத்திற்கு காணப்படும் அநுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் பற்றி ஆராய்வது அவசியமானதாகும். முதலில் இதனால் எமது சமூகத்திற்கு ஏற்படும் அநுகூலங்களை சுருக்கமாக நோக்குவோம்.

01 பல்துறை சார்ந்தவர்களும் சமூகத்தின் அபிவிருத்தியில் பங்கெடுக்கும் ஒரு ஆரோக்கியமான நிலை உருவாகும்.

02 சமூகத்தின் பலதரப்பட்ட பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.

03 வெளியிலிருந்து வரும் சவால்களை சமூக அமைப்பில் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும்.

04 எமது சமூகத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ஏனைய சமூகங்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் இது ஏதுவாக அமையும்.

தேசிய ஷூரா பேரவை உருவாக்கப்படுவதால் ஏற்பட முடியுமான சில மோசமான விளைவுகளை அல்லது அதன் உருவாக்கத்தில் காணப்படும் அபாயங்களை நோக்குவோம்.

01 89 வருடமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை முஸ்லிம்களுக்கான தலைமைத்துவத்தை சிறந்த முறையில் வழங்கி வருகின்றது. எமது சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை குறித்த துறைசாரந்த அறிஞர்களுடன் ஆலோசித்து, எமது சமுகத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் நிதானமாக தீர்வுகளை முன்வைத்து வந்துள்ளது. இகற்கான உதாரணமாக ஹலால் மற்றும் ஹிஜாப் பிரச்சினைகளை குறிப்பிடலாம். இந்நிலையில் தேசிய ஷூரா பேரவையின் முலம் புதியதொரு கூட்டுத்தலைமைத்துவம் வழங்கப்படுவது அவசியமானதா எனும் கேள்வி எழுகின்றது. ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் இல்லாதிருப்பது ஆபத்தானது போலவே இரு தலைமைத்துங்கள் இருப்பதும் ஆபத்தானதாகும். ஏனெனில் தலைமைக்கான போட்டியில் குறித்த சமூகம் பாதிக்கப்படும். இவ்வாறானதொரு சிக்கலான நிலை ஏற்பட்டால் சிறந்த அரசியல் தலைமையின்றி அசிங்கப்பட்டுக் காணப்படும் எமது சமூகம் சிறந்த மார்;கத் தலைமையுமின்றி பரிதாப நிலைக்குச் சென்றுவிடும்.

02 இலங்கை முஸ்லிம்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா டீடீளு போன்ற சில அந்நிய சக்;திகள் மூலம் பல வகையிலும் தாக்கப்பட்டுவருவது நாம் அறிந்த விடயம். மக்தப் மற்றும் ஹலால் விவகாரங்கள் இதற்கான சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறான நிலையில் தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். அதேபோன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளின் ஆலோசனைகளை பெற்று தமது செயற்பாடுகளை அபிவிருத்தியடையச் செய்வது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கடமையாகும். இச்ந்தர்ப்பத்தில் தேசிய ஷூரா பேரவை உருவாக்கப்படுவதால் தலைமைத்துவத்தை பாதுகாக்கும் இச்சமூகக் கடமை மறக்கடிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. 

03 தேசிய ஷூரா பேரவைக்கு எமது சமூகத்தின் நூறுவீத அங்கீகாரம் கிடைப்பதோ அல்லது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு காணப்படுமளவு சமூக அங்கீகாரம் கிடைப்பதோ சாத்தியமற்றதாகும். இந்நிலையில் தேசிய ஷூரா பேரவை உருவாக்கப்படுவதால் ஏலவே பல கூறுகளாக பிரிந்து காணப்படும் எமது சமூகம் தலைமைத்துவத்தின் பெயரால் பிளவுபடும் அபாயம் காணப்படுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக.

இவ்வாறான அபாயங்களையும் தீங்குகளையும் நீக்கி ஆரம்பத்தில் குறிப்பிட்ட நன்மைகளை அடைந்துகொள்வதற்கான சில முன்மொழிவுகள்.

01 உருவாக்கப்படும் தேசிய ஷூரா பேரவை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைக்கு ஏற்ப அதன் கட்டுப்பாட்டில் இயங்குவது சிறந்ததாகும். தலைமைத்துவ போட்டியை நீக்குவதற்கு இது காரணமாக அமையும். இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செயற்படுத்தாத சமூகத்திற்கு அவசியமான பல செயற்திட்டங்களை தேசிய ஷூரா பேரவை மூலம் செயற்படுத்த முடியுமாக இருக்கும்.

02 உருவாக்கப்படும் தேசிய ஷூரா பேரவை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு தனது ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கி அதனை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதாகும். இது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும்.

03 உருவாக்கப்படும் தேசிய ஷூரா பேரவை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அங்கீகாரத்தை பெற்றுக்கௌள வேண்டும். அத்துடன் தனது நிறைவேற்றுக் குழுவில் எமது சமூகத்தில் அறிமுகமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளுக்கு உறிய இடம் வழங்குவது சிறந்ததாகும். இதன்போது தேசிய ஷூரா பேரவை சமூக அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லாஹ் எம் அனைவரது முயற்சிகளையும் பொருந்திக்கொள்வானாக! சமூகத்திற்காக தூய எண்ணத்துடன் செயற்படும் தாஈக்களாக எம்மை ஆக்குவானாக!

3 comments:

  1. சகோ,பார்ஹான் பாரிஸ் அவர்கள் இக்கட்டுரையின் மூலம் தேசிய சூரா
    சபை அமைவதனால் ஏற்படப்போகும் சாதக,பாதக தன்மைகளையும்
    அதற்கான தமது ஆலோசணைகளையும் முன்வைத்திருக்கிறார்.இஸ்லாத்தி ன்பெளதீக கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்களை கண்கூடாககாண்கிறோம்.அல்லாஹீத்தலாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் புதிய சமூகமொன்றை உருவாக்கி,அதற்கு தலைமை தாங்கும் எல்லாவித மான தகுதி களையும் கொண்டிருந்தது நபி(ஸல்)அவர்களுக்கிருந்த சிறப் பம்சமாகும்.எனவே உலகம் உள்ளலவும் இது போன்ற தனிமனித தல
    மைத்துவ மொன்றை யாராலும் வழங்க முடியாது என்பதில் யாருக்கும் தர்க்கம் கிடையாது.எனவே ஜம்மியதுல் உலமா சபை 89 வருட வரலாரை
    கொண்டிருந்தாலும்,துரைசார் நிபுனர்களை உள்வாங்குவதில் அசமந்தப் போக்கை வெளிப் படுத்தியிருக்கிறது.நடுநிலைத்தவரிய ஆதிக்கத்தின் கீழ்
    நீண்டகால பிரச்சிணைகளுக்குக் கூட தீர்வு காண முடியாமல் தடுமாறிய சந்தர்ப்பங்களை் நிறையவே இருக்கின்றன.எனவே சமூகத்தின் பாதுகாப்பு கருதி தேசிய சூரா சபையும்,ஜம்மியதுல் உலமா சபையும்,ஒன்றுக் கொண்டு எதிரானது என்ற மனோ நிலை உருவாகாமல் இணைந்து செயல்படுவதே அறிவார்ந்த விடயமயகும்.

    ReplyDelete
  2. Very nice analytic article, it must be considered. appreciate Bro. Farhan for such great thinking.

    ReplyDelete
  3. masha allah. great 2 see br. farhan here.
    as u hav expresd v al hav 2 get together to think for th benefit of humanbeing. so , i feel better th suggestion u left here. y we want 2 reject any beneficial steps such as th matr of national shoora?

    f v reject any group v may undergo failiure further in nation building as v experienced much in our da'awa history in ths country.

    so, i prefer acceptenc to rejectn,
    and t s better to exist national shoora under the supervision of jammiyyathul ulama.and i suggest jamiyya to hav shoora members from national shoora body as ex officio.

    we need to think of unity in diversity. t s the talk of town all over the world.

    readers, pls hav harmonious mentality and moderate thinking. t s the beauty of islam.

    thn, t s note worthy to mentn here tht v must not hav to think for th benefit f muslims only.bt, v hav to thnk and work for humanity and human being beyond relegious and racial boundaries.

    may allah halp us forever.
    hav a nice mornning. bye

    ReplyDelete

Powered by Blogger.