இரண்டு நாட்கள் கடலுக்குள் உயிர் வாழ்ந்த நைஜீரியர்
நைஜீரியா நாட்டிற்குச் சொந்தமான ஆழ்துளை எண்ணெய்க்கிணறு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது. கடந்த மே மாதம் 26ஆம் தேதி அன்று, செவ்ரான் என்ற அந்த எண்ணெய் மேடையின் அருகில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றை நிலைநிறுத்தும் பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடித்த அலையின் வேகத்தில் ஊழியர்கள் நின்றுகொண்டிருந்த ஜசூன்- 4 என்ற இழுவைப்படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்தப் படகில் இருந்த 12 பேரும் கடலுக்குள் மூழ்கினர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட நீச்சல் வீரர்கள் இறந்துபோன 19 பேரின் உடல்களை மீட்டனர். மற்ற இரண்டு பேரைக் காணவில்லை என்று தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவரான, கப்பலில் சமையல்காரராகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஹாரிசன் ஓகேன் கவிழ்ந்த படகில் இருந்த அறைக்குள் இருந்தார். அங்கிருந்த கழிவறையின் மேல்புறம்
வழியாக தண்ணீர் ஏறத்தொடங்கிய போதும், அங்கு உருவாகியிருந்த நான்கடி விட்டமுள்ள காற்றுகுமிழினால் அவருக்கு சுவாசிக்க முடிந்தது.
தான் இறந்துவிடுவோம் என்றுகூட ஹாரிசன் நினைத்திருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பின்னர் தென்னாப்பிரிக்க நீச்சல் வீரர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இரண்டு நாட்கள் உப்புத் தண்ணீரில் இருந்ததால் அவரது தோலின் மேல்பாகங்கள் பல இடங்களில் பிய்ந்து விட்டன. நாக்கின் மேல்புறமும் உப்புத்தண்ணீரால் உரிந்து விட்டது. ஆயினும், கடலுக்குள் இரண்டு நாட்கள் சிக்கியும், காப்பாற்றப்பட்டதை அறிந்து அவர் மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
Post a Comment