இலங்கையர்கள் சீனாவின் அடிமைகளாகும் நிலை - எச்சரிக்கிறது ஐக்கிய தேசிய கட்சி
இலங்கையில் சகல மக்களும் சீனாவின் அடிமைகளாகும் நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனா இலங்கைக்கு நிபத்தனையின் அடிப்படையிலேயே கடனுதவிகளை வழங்குகின்றது. நுரைச்சோலை அனல்மின்நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்துக்கொள்ள முடியாத அரசாங்கம், சீன வங்கியிடம் உதவி கோரியது. அந்த கடனை திரும்பிச் செலுத்த காலதாமதமானதால் நுரைச்சோலை திட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர யோசனை கூறியுள்ளது. இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் நிபந்தனையில் கீழ் அரசாங்கம் சீனாவிடம் செல்கிறது. இதனால் இலங்கை குடிமக்கள் அனைவரும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம் தோன்றியுள்ளது
eppidi 2000 la irunthu 2002 varai norwayku adimaiyana maathiriya.....
ReplyDeleteEppudi ranil mahindawukku adimai yanathu mathiriya..?
ReplyDeleteஎத்தனை காலம்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகளாக இருப்பது?
ReplyDeleteயாருக்காவது அடிமைகளாக இருந்தே பழகியவர்களுக்கு தங்களது எஜமானர்களையாவது அவ்வப்போது மாற்றிக்கொள்ளுவதற்கு சிறிது அனுமதிக்கக்கூடாதா, அத்தநாயக்க அவர்களே..?
முதல்ல ரணிலுக்கு அடிமையாவதை விட்டும் விலகுங்கள் திஸ்ஸ அவர்களே
ReplyDelete